Ad Code

Responsive Advertisement

அறிவியல் ஆய்வகம் இல்லாத பள்ளி; கணக்கெடுக்க உத்தரவு

அரசு பள்ளிகளில், அறிவியல் ஆய்வகத்துக்கு கட்டடம் இல்லா பள்ளிகள் கணக்கெடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில், 5,000க்கும் மேற்பட்ட உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. இவற்றில், மேல்நிலைப்பள்ளிகளில் மட்டுமே, அறிவியல் ஆய்வகத்துக்கு கட்டடங்கள் இருந்தன. சமச்சீர் கல்வி அறிமுகப்படுத்திய பின், 10ம் வகுப்பிலும், அறிவியல் செய்முறைகள் அமல்படுத்தப்பட்டதால், உயர்நிலை பள்ளிகளுக்கும் அறிவியல் ஆய்வகம் அமைக்க வேண்டியது அவசியமானது.

இதில், கடந்த நான்கு ஆண்டுகளில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட நடுநிலைப்பள்ளிகளும், உயர்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டது. இப்பள்ளிகளுக்கான வகுப்பறை கட்டட பணிகளே இன்னும் தொடங்கப்படாமல் உள்ளது. இதனால், ஆய்வக வசதி உள்ள உயர்நிலைப்பள்ளிகளின் எண்ணிக்கை அரிதாகவே இருந்து வருகிறது. ஒரு சில பள்ளிகளில் காலியாக உள்ள வகுப்பறையில் தற்காலிக ஆய்வகம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.



இந்நிலையில், அனைத்து மேல்நிலை, உயர்நிலைப்பள்ளிகளிலும், அறிவியல் ஆய்வகத்துக்கு கட்டடம் தேவைப்படும் பள்ளிகளின் எண்ணிக்கையை கணக்கெடுக்க, மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஆய்வக வசதியில்லாமல் உள்ள பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், அதற்கான அறிக்கையை சமர்பிக்க சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement