Ad Code

Responsive Advertisement

வாட்ஸ் ஆப்பில் திடீர் கோளாறா,சரி செய்வது எப்படி?


வாட்ஸ்ஆப் செயலிக்கு அறிமுகமே தேவையில்லை. உலகின் மிக முக்கிய குறுந்தகவல் செயலியாக இருக்கும் வாட்ஸ்ஆப் கிட்டதட்ட 800 மில்லியன் பயனர்களை கொண்டிருக்கின்றது. நண்பர்களுக்கு குறுந்தகவல், புகைப்படம், வீடியோ, ஆடியோ உள்ளிட்டவைகளை அனுப்பி கொள்ள வாட்ஸ்ஆப் தலைசிறந்த சேவையாக இருந்து வருகின்றது.


இந்த செயலி வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சேவைகளை வழங்கி வரும் நிலையில் எத்தனை பேர் இவைகளை முழுமையாக பயன்படுத்துகின்றனர்?


எப்படி இருந்தாலும் வாட்ஸ்ஆப் செயலியில் அவ்வப்போது சில பிரச்சனைகளும் ஏற்படத்தான் செய்கின்றது. இங்கு வாட்ஸ்ஆப் செயலியில் அதிகம் ஏற்படும் சில பிரச்சனைகளும் அதற்கான தீர்வுகளையும் தான் இங்கு தொகுத்திருக்கின்றோம்.


இன்ஸ்டால்
வாட்ஸ்ஆப் செயலியை இன்ஸ்டால் செய்ய முடியவில்லையா?
புதிய வெர்ஷன் வாட்ஸ்ஆப் செயலியை பயன்படுத்த ஸ்மார்ட்போன் கருவியில் குறைந்த பட்சம் ஆண்ட்ராய்டு 2.1 இயங்குதளமாவது தேவைப்படும். இதோடு செட்டிங்ஸ் பகுதியில் Unknown Sources ஆப்ஷனை செயல்படுத்தப்பட்டு இருக்க வேண்டும்.


இதை செய்ய Settings > Security > Unknown Sources க்ளிக் செய்ய வேண்டும்.


டேப்ளெட்
டேப்ளெட் கருவியில் வாட்ஸ்ஆப் இன்ஸ்டால் செய்ய வை-பை மூலம் மட்டும் வேலை செய்யும் டேப்ளெட் கருவி. என்றால் வாட்ஸ்ஆப் செயலியை இன்ஸ்டால் செய்வதில் சில பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். வாட்ஸ்ஆப் பயன்படுத்த கட்டாயம் சிம் கார்டு தேவைப்படும். போன் நம்பர் மூலம் வாட்ஸ்ஆப் கணக்கை ஆக்டிவேட் செய்தால் மட்டுமே வாட்ஸ்ஆப் பயன்படுத்த முடியும். இதற்கான தீர்வு டேப்ளெட் கருவியில் வை-பை பயன்படுத்தி கூடுதல் போன் நம்பர் கொண்டு வாட்ஸ்ஆப் பயன்படுத்தலாம்.


வாட்ஸ்ஆப் வேலை செய்யவில்லை
வை-பை அல்லது மொபைல் டேட்டா கனெக்ஷனில் ஏற்படும் பிரச்சனைகளால் சில சமயங்களில் வாட்ஸ்ஆப் செயலி வேலை செய்யாதது போல தோன்றும். ஒரு வேலை வாட்ஸ்ஆப் மூலம் குறுந்தகவல் அனுப்ப முடியவில்லை என்றால் இதை செய்யுங்கள் : முதலில் கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து புதிய வெர்ஷன் வாட்ஸ்ஆப் செயலியை பதிவிறக்கம் செய்து, வை-பை அல்லது நெட்வர்க் கனெக்ஷன் சரியாக வேலை செய்கின்றதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். இவைகளை செய்தும் வாட்ஸ்ஆப் வேலை செய்யவில்லை எனில் வாட்ஸ்ஆப் செயலியை அன்-இன்ஸ்டால் செய்து மீண்டும் இன்ஸ்டால் செய்ய வேண்டும்.


காண்டாக்ட்
வாட்ஸ்ஆப் செயலியில் காண்டாக்ட்கள் தெரியவில்லை
வாட்ஸ்ஆப் உங்களது காண்டாக்ட்களை கண்டு கொள்ள வில்லை என்றால், கருவியில் காண்டாக்ட்கள் சரியாக உள்ளதா என்பதை உறுதி செய்து அவைகளை வாட்ஸ்ஆப் பயன்படுத்துகின்றதா என்பதை உறுதி செய்திடுங்கள்.


ப்ரோஃபைல்
போட்டோ ப்ரோஃபைல் போட்டோக்களை மறைக்க வாட்ஸ்ஆப் செயலியில் ப்ரோஃபைல் படத்தை மறைக்க வாட்ஸ்ஆப் ப்ளஸ் செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும். இந்த செயலியில் ப்ரோஃபைல் போட்டோவை மறைக்க முடியும்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement