இ.பி.எப்., எனப்படும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி தொகைக்கு வரி விதிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல், சர்ச்சையை ஏற்படுத்தியது.இதையடுத்து இ.பி.எப். வட்டிக்கு வரிவிதிப்பது ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பை மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி இன்று வெளியிட்டுள்ளார்.
முன்னதாக 'தொழிலாளர்கள் ஓய்வு அடையும்போது பெறும், இ.பி.எப்., மற்றும் பொது வருங்கால வைப்பு நிதி எனப்படும் பி.பி.எப்., தொகையில், 60 சதவீதத்தின் மீது ஓய்வுக்கால வரி விதிக்கப்படும்' என, பட்ஜெட் தாக்கலின் போது நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறியிருந்தர். இதற்கு தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
இதையடுத்து தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியின்மீது வரி விதிக்கும் திட்டத்தை மறுபரிசீலனை செய்யுமாறு நிதி அமைச்சர் அருண் ஜெட்லியை பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தினார். குறிப்பாக, இந்த வரி விதிப்பு யோசனையை இப்போதைக்கு தள்ளிப்போடுமாறு அவர் அருண் ஜெட்லியிடம் கூறியதாக தகவல் வெளியானது.இதையடுத்து ம் இ.பி.எப். மீது வரி விதிக்கும் முடிவை தற்போதைக்கு ஒத்திவைத்து இந்த ரத்து அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக தெரிகிறது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை