Ad Code

Responsive Advertisement

வாடகை வீட்டில் வசிப்போர், முதல் வீடு வாங்குவோருக்கு வருமான வரிச் சலுகை

வாடகை வீட்டில் வசிப்போர், வருமான வரியில் ரூ.60 ஆயிரம் வரை விலக்கு பெறலாம்; முதல் முறையாக சொந்த வீடுவாங்குவோர் கூடுதலாக ரூ.50 ஆயிரம் வரை வரிச் சலுகை பெறலாம் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்போது வருமான வரி செலுத்துவோர் வீட்டு வாடகையைக் கணக்கில் காட்டுவதன் மூலம் ரூ.24 ஆயிரம் வரையே வரிச் சலுகை பெறலாம் என்ற நிலை உள்ளது. பட்ஜெட் அறிவிப்பு மூலம் இனி ரூ.60 ஆயிரம் வரை வரி விலக்கு பெற முடியும்.இது தொடர்பாக பட்ஜெட் உரையில் அருண் ஜேட்லி மேலும் கூறியதாவது: 80ஜிஜி பிரிவின் கீழ் வீட்டு வாடகை மூலம்வரிச் சலுகை பெறுவோர் இப்போது ஆண்டுக்கு ரூ.24 ஆயிரம்வரை வரி விலக்கு பெறலாம் என்ற நிலை உள்ளது. இந்த வரி விலக்கு வரம்பு இனி ரூ.60 ஆயிரமாக அதிகரிக்கப்படும். இதன் மூலம் வாடகை வீட்டில் வசிக்கும் ஏராளமான மக்கள் பயனடைவர்.



அதேபோல முதல் முறையாக வீடு வாங்குவோர் ரூ.50 ஆயிரம் வரை வருமான வரியில் கூடுதல் சலுகை பெறலாம். இந்த வீட்டுக்காகப் பெறும் கடன் தொகை ரூ.35 லட்சத்துக்கு உள்ளாகவும், வீட்டின் மொத்த மதிப்பு ரூ.50 லட்சம் வரை இருந்தால் மட்டுமே இந்த கூடுதல் வரிச் சலுகை கிடைக்கும்.ரூ.5 லட்சத்துக்குள் வருமானம் பெறுவோருக்கு 87ஏ பிரிவின் கீழ் வழங்கப்படும் வருமான வரிச் சலுகை ரூ.2 ஆயிரத்தில் இருந்து ரூ.3 ஆயிரமாக அதிகரிக்கப்படுகிறது என்று ஜேட்லி தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement