Ad Code

Responsive Advertisement

ஜிப்மர் நுழைவு தேர்வு விண்ணப்பம்: 7ம் தேதி முதல் ஆன்லைனில் பதிவு

ஜிப்மர் நுழைவுத் தேர்விற்கான விண்ணப்பங்கள் வரும், 7ம் தேதி முதல், ஆன்லைனில் வினியோகிக்கப்பட உள்ளது. புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள ஜிப்மர் மருத்துவக் கல்லுாரியில், 200 எம்.பி.பி.எஸ்., இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கு ஆண்டுதோறும் அகில இந்திய அளவில் நுழைவுத் தேர்வு மூலம், மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது.

இந்தாண்டிற்கான, ஜிப்மர் நுழைவு தேர்வு வரும் ஜூன் மாதம், 5ம் தேதி, 75 நகரங்களில் காலை, 10:00 மணி முதல், 12:30 மணி வரை நடக்கிறது. இதற்கு ஆன்லைன் மூலம், விண்ணப்ப வினியோகம் வரும், 7ம் தேதி துவங்குகிறது.தமிழகத்தில் சென்னை, சேலம், கோவை, நாகர்கோவில், திருச்சி, துாத்துக்குடி, நெய்வேலி, நாமக்கல் மற்றும் புதுச்சேரியில் நுழைவுத் தேர்வு நடக்கிறது. ஆன்லைன் மூலம், மே மாதம், 4ம் தேதி வரை விண்ணப்பங்கள் வினியோகிக்கப்படும்.


நுழைவு தேர்வு கட்டணம்:
பொது பிரிவு, ஓ.பி.சி., - ஓ.சி.ஐ., பிரிவினர் விண்ணப்பபடிவ கட்டணமாக, 1,000 ரூபாய் செலுத்த வேண்டும். எஸ்.சி., - எஸ்.டி., விண்ணப்ப கட்டணம்,'நெட் பேங்கிங், கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு' வாயிலாக மட்டுமே செலுத்தப்பட வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு விண்ணப்ப கட்டணம் இல்லை.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement