சென்னை எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தின் ஒருங்கிணைந்த பொறியியல் தேர்வுக்கு (எஸ்.ஆர்.எம்.ஜே.இ.இ.இ.) விண்ணப்பிக்கும் தேதி மார்ச் 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 150 நகரங்களில் ஏப்ரல் 19 முதல் 25-ஆம் தேதி வரை இணையவழியில் இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது.பிளஸ் 2 தேர்வு நடைபெற்று வருவதாலும் மாணவர், பெற்றோர் வலியுறுத்தியதாலும் இந்தத் தேர்வுக்கான விண்ணப்ப நாள் மார்ச் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தேர்வுக்கு இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். தேர்வெழுதும் நாளுக்கான பதிவு மார்ச் 26-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை நடைபெறும். இந்த நுழைவுத் தேர்வின் முடிவுகள் மே 1-ஆம் தேதி வெளியிடப்படும்.இதே போல் உடல் நல அறிவியல் ("ஹெல்த் சயின்ஸஸ்') பட்டப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு, எம்.டெக் படிப்புக்கான எஸ்.ஆர்.எம்.ஜி.இ.இ.டி. தேர்வு, எம்.பி.ஏ. படிப்புக்கான எஸ்.ஆர்.எம். "கேட்' நுழைவுத் தேர்வு ஆகியவற்றுக்கும் விண்ணப்பிக்கும் நாள் மார்ச் 30-ஆம்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை