Ad Code

Responsive Advertisement

பிளஸ் 2 பொதுத்தேர்வு துவங்கியது சொன்னதை செய்தது தேர்வு துறை

தமிழகம் மற்றும் புதுச்சேரியில், நேற்று, பிளஸ் 2 பொதுத்தேர்வு துவங்கியது. பாடப் புத்தகத்தின் பின்பக்க கேள்விகள் மட்டுமின்றி, பாடங்களின் உள் பகுதியில் இருந்தும் கேள்விகள் இடம் பெற்றன. நேற்று நடந்த, பிளஸ் 2 தமிழ் முதல் தாள் தேர்வில், 100 மதிப்பெண்களுக்கான கேள்விகளில், 10 மதிப்பெண்களுக்கான கேள்விகள், பாடத்தின் உள்ளே இருந்து இடம் பெற்றன. ஒரு மதிப்பெண் கேள்விகள், ஆறு; இரண்டு மதிப்பெண் கேள்விகள், இரண்டு என, பாடங்களின் உள் பகுதியிலிருந்து கேட்கப்பட்டன.


'மாணவர்கள், பாடத்தின் பின் பகுதியில் உள்ள வினாக்கள் மற்றும் வினா வங்கிகளை மட்டும் படிக்க வேண்டாம்; பொதுத்தேர்வில், பாடத்தின் உள் பகுதியிலிருந்தும் வினாக்கள் இடம் பெறும்' என, தேர்வுத் துறை ஏற்கனவே அறிவுறுத்தியிருந்தது. இந்நிலையில், நேற்றைய தேர்வில், புதிய நடைமுறை அமலானது. இதன்மூலம், விடைகளை மனப்படாம் செய்து தேர்வெழுதும் மாணவர்கள், இனி, 'சென்டம்' எனப்படும், நுாற்றுக்கு நுாறு மதிப்பெண் பெறுவது கடினம்.



நேற்றைய தேர்வில், கடலுாரை சேர்ந்த பள்ளி மாணவர் ஒருவர் மற்றும் கிருஷ்ணகிரியை சேர்ந்த தனித் தேர்வர் ஒருவரும், மற்றொரு மாணவரின் விடைத்தாளை பார்த்து, 'காப்பி' அடித்த குற்றத்திற்காக, பிடிப்பட்டனர்.



எத்தனை பேர்?தமிழகத்தில், பிளஸ் ௨ தேர்வை, 6,550 பள்ளிகளைச் சேர்ந்த, 8.82 லட்சம் பேர், 2,421 மையங்களில் எழுதுகின்றனர். இவர்களில், 42 ஆயிரம் தனித்தேர்வர்கள் மற்றும், 4.47 லட்சம் மாணவியரும் அடங்குவர்.



வரவேற்கிறோம்!இந்த மாற்றத்தால், இனி வெறும் வினாக்களையும், வினா வங்கியையும் மட்டுமே படிக்க வேண்டும் என்ற நிலை மாறி, புத்தகம் முழுவதையும் படிக்க வேண்டும் என்ற கட்டாயத்தை, தேர்வுத் துறை உருவாக்கி உள்ளது; அதை வரவேற்கிறோம்.


நீ.இளங்கோ, தமிழாசிரியர், தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்க நிர்வாகி- 

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement