பிளஸ் 2 ஆங்கிலம் தேர்வு, இரண்டாம் தாள் வினாத்தாளில், மது வகைகள் குறித்த கேள்வி இடம் பெற்றதால், பெற்றோர் அதிர்ச்சியடைந்து உள்ளனர். பிளஸ் 2 பொதுத்தேர்வில், ஆங்கிலம் முதல் தாளுக்கு, மார்ச் 9; இரண்டாம் தாளுக்கு, 10ம் தேதி தேர்வு நடந்தது. இரண்டாம் தாள் வினாத்தாளில், ஒரு மதிப்பெண் வினாக்களில், ஐந்தாவது கேள்வி, மது வகைகள் தொடர்பான கேள்வியாக இடம் பெற்றிருந்தது.
'முதியவர் பெர்மன் தன், 'மாஸ்டர் பீஸ்' படத்தை வரைந்து கொண்டிருக்கும் போது, எந்த வகை மதுவை அதிகமாக குடித்தார்?' என, கேட்கப்பட்டு உள்ளது. இந்த கேள்விக்கு, 'ஒயின், ஓட்கா, பீர், ஜின்' என, நான்கு மது வகைகளில், ஒரு விடையை தேர்வு செய்யும்படி கூறப்பட்டது. இந்த கேள்விக்கான விடை, 'ஜின்.'
பாடம் என்ன?
பிளஸ் 2 ஆங்கில பாடத்தின் துணை புத்தகத்தில், சில நாவல்கள் பாடங்களாக வழங்கப்பட்டு உள்ளன. அதில், பிரபல எழுத்தாளர் ஓ ஹென்ரியின், கடைசி இலை எனப்படும், 'தி லாஸ்ட் லீப்' கதை இடம் பெற்றுள்ளது. அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் ஸ்டுடியோ நடத்தும், இரண்டு பெண்களில், ஒருவருக்கு பனி காலத்தில் நிமோனியா பாதிப்பு ஏற்படும். அந்த பெண், தன் வீட்டின் எதிரில் தெருவில் உள்ள வைன் படர்க்கொடி மரத்தில், இலையுதிர் காலம் என்பதால், இலைகள் உதிர்வதை தினமும் பார்ப்பார்.'கடைசி இலை உதிர்ந்ததும், நானும் இறந்து விடுவேன்' என்பார். அதை கேட்ட மற்றொரு பெண், கடைசி இலை இருப்பது போல், ஓவியம் வரைய, ஓவியர் பெர்மனை தொடர்பு கொள்வார். ௬௦ வயது ஓவியரும், தன் வாழ்நாளில், ஒரு முறையாவது, 'மாஸ்டர் பீஸ்' ஓவியத்தை வரையும் லட்சியத்தில் இருப்பார்.
அதனால், நிமோனியாவில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்காக, இரவில், நடுங்கும் குளிரில் சென்று, 'ஜின்' மதுவை அளவுக்கு அதிகமாக குடித்து, வைன் மர இலையை வரைவார். மறுநாள் இலை உதிர்ந்து விடும். ஆனால், கடைசி இலை இருப்பது போல் ஓவியம் காட்டும். அப்போது, டாக்டர்கள் அந்த அறைக்கு வந்து, 'நிமோனியா பாதிக்கப்பட்ட பெண், அபாய கட்டத்தை தாண்டி விட்டார். அவரை மனதளவில் சிகிச்சை அளித்து பிழைக்க வைத்து விட்டீர்கள். ஆனால், இரவில் வெளியே இருந்தபடி ஓவியம் வரைந்த, பெர்மன் குளிர் பாதிப்பில் இறந்து விட்டார்' என, தெரிவிப்பர். இதுதான், அந்த கதை.
பிளஸ் 2 தேர்வில், இதுபோன்ற ஒரு கேள்வி தேவையா? மாணவர்கள் ஒழுக்கம் மற்றும் உயர்கல்விக்கு உகந்த பாடங்களை படித்திருக்கின்றனரா என்பதையே, வினாத்தாள் மூலம் மதிப்பிட வேண்டும். மாறாக, பாடம் இருக்கிறது என்பதற்காக, மது, மாது என்றெல்லாம் கேள்விகளை கேட்பது என்ன நியாயம்?மது வகைகளை குறிக்கும் பாடத்தை, முதலில் பாடப் புத்தகங்களில் இருந்து நீக்க வேண்டும். - பெற்றோர்
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை