Ad Code

Responsive Advertisement

பிளஸ் 2 தேர்வு:காப்பியடிப்பதை தடுக்க 2 வகை வினாத்தாள்

பிளஸ் 2 தேர்வில் காப்பியடிப்பதை தடுக்க, இரண்டு வகை வினாத்தாள் வழங்கப்பட உள்ளன. மொழிப்பாடத்தில் எழுத்துக்களை அழகாக்க, கோடிட்ட விடைத்தாள்கள் அளிக்கப்படும்.பிளஸ் 2 தேர்வு, இன்று துவங்குகிறது. முதலில், நான்கு மொழிப்பாட தேர்வுகள் நடக்கின்றன. இந்த தேர்வுகளுக்கு,மாணவர்களுக்கு கோடிட்ட விடைத்தாள்கள் வழங்கப்படும்.

மாணவர்களின் கையெழுத்தை அழகாக்கும் விதமாக, கடந்த ஆண்டு முதல், இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது. மாணவர்கள் காப்பியடிப்பதை தடுக்க, 'ஏ, பி' என, இரண்டு வகை வினாத்தாள்கள் வழங்கப்படும். அதாவது ஒவ்வொரு, பெஞ்சிலும், நான்கு மாணவர்கள் அமர்ந்தால், முதல் மாணவருக்கும், மூன்றாம் மாணவருக்கும் ஒரே மாதிரியான வினாத்தாளும்; இரண்டாம் மாணவருக்கும், நான்காம் மாணவருக்கும் வேறு மாதிரியான வினாத்தாளும் தரப்படும்.இரண்டு வகை வினாத்தாளில் இடம் பெற்றுள்ள வினாக்களில் மாற்றம் இருக்காது; மாறாக, வினாக்கள் அமைந்துள்ள வரிசைமட்டும் மாறும். அதனால், ஒரு மாணவரின் விடைத்தாளை மற்றொரு மாணவன் வெறும் எண் அடிப்படையில் மட்டும் பார்த்து எழுதினால், அந்த விடைத்தாள் தவறாகி விடும். 'காப்பியடிப்பதை தடுக்கவே, இந்த ஏற்பாடு' என, அதிகாரிகள் தெரிவித்தனர்.



எது கூடாது?விடைத்தாளில், 'கலர் பென்சில், ஸ்கெட்ச்'சால் எந்த குறியீடும், கோடும் இடக்கூடாதுவிடைத்தாளில் பெயர், பதிவு எண் எழுதக் கூடாது. அந்த விவரங்கள் முகப்பு தாளில் பார்கோடுடன் அச்சிடப்பட்டிருக்கும்விடைகளை எழுதிவிட்டு, விடைத்தாளின் அனைத்து பக்கங்களையும் முழுவதுமாக அடிக்கக் கூடாது 'பிட்' அடித்தல், பார்த்து எழுதுதல் போன்ற முறைகேடுகள் கூடாதுஇந்த ஆண்டு, புத்தகத்தின் உள்பகுதியில் இருந்து கேள்விகள் இடம் பெறும் என்பதால் கேள்விகளை பார்த்து யோசித்து எழுத வேண்டும்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement