பிளஸ் 2 பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தம், மார்ச், 14ல் துவங்க உள்ளது. சிறப்பு குறியீடு கள் இருந்தால், அந்த விடைத்தாள்களை தனியாக பிரித்து வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.பிளஸ் 2 பொதுத்தேர்வு, மார்ச், 4ல் துவங்கியது. தமிழ் பாடத்துக்கான, இரண்டு தாள்களுக்கு தேர்வு முடிந்துள்ளது. இன்றும், நாளையும், ஆங்கில பாட தேர்வுகள் நடக்கின்றன.
அரசு உத்தரவு:
மார்ச், 14 முதல் முக்கிய பாடங்களுக்கு தேர்வுகள் துவங்குகின்றன. சட்டசபை தேர்தல் வருவதால், தேர்வு பணிகளை விரைந்து முடிக்க, தேர்வுத்துறைக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, தேர்வு நடக்கும் போதே, விடைத்தாள் திருத்த பணிகள் நடக்க உள்ளன. தமிழ் பாட விடைத்தாள்களை, தேர்வு மையம் வாரியாகதொகுத்து அவற்றை விடைத்தாள் திருத்தும் மையத்தில் பிரித்து வைக்கும் பணி நடந்து வருகிறது.
கண்காணிப்பு:மார்ச், 14 முதல் விடைத்தாள் திருத்த பணிதுவங்குகிறது. முதல், இரண்டு நாட்களுக்கு, தலைமை விடை திருத்துனர் மற்றும் விடை திருத்தும் மைய கண்காணிப்பு அதிகாரிகள், விடைத்தாள்களை கலக்கி, பள்ளிகள் மற்றும் தேர்வு மையங்களின் அடையாளம் தெரியாத வகையில், விடைத்தாள்களை பிரிக்க உள்ளனர்.அதன்பின், அவை, விடை திருத்தும் மையங்களுக்கு அனுப்பப்படும். மார்ச், 16 முதல், விடை திருத்துனர்களின் பணி துவங்கும். இதற்காக, மாவட்ட மையங்களுக்கு தேர்வுத்துறை மூலம் விடை குறிப்புகள் அனுப்பப்படும். 'விடை திருத்தத்தில், எந்த முறைகேடுக்கும் இடம் அளிக்கக் கூடாது' என, ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
குறியீடு இருந்தால்... விடைத்தாள் திருத்தம் தொடர்பாக, ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்கள்: மறுகூட்டல், மறு திருத்தம் போன்றவை அதிக அளவில் இல்லாத அளவுக்கு சரியாக விடைத்தாள்களை திருத்த வேண்டும் விடைத்தாளில் துளையிட்டிருத்தல், தேர்வு எண் எழுதியிருத்தல், பென்சில், 'ஸ்கெட்ச்' போன்றவற்றால் குறியீடு மற்றும் கோடிடல், வினாத்தாளுக்கு தொடர்பில்லாத வாசகம் எழுதியிருத்தல் போன்றவற்றை கண்டறிந்தால், அத்தகைய விடைத்தாள்களை திருத்தி தனியே வைக்க வேண்டும்தேர்வுத்துறை மண்டல இணை இயக்குனர் அல்லது தேர்வுத்துறை இணை இயக்குனர்களுக்கு தகவல் அளிக்க வேண்டும்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை