ராமநாதபுரம் மாவட்டத்தில் கலெக்டர் உத்தரவால் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்களுக்கு 10 நாட்கள் ஊதியம் வழங்கப்படவில்லை. மற்ற மாவட்டங்களில் அரசு ஊழியர்களுக்கு முழுமையாக ஊதியம் கிடைத்துள்ளது.
புதிய பென்ஷன் திட்டம் ரத்து, காலியிடங்களை நிரப்புவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் மாநிலம் முழுவதும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் பிப்., 10 முதல் பிப்., 19 வரை நடந்தது.சட்டசபையில் 110 விதியில் அரசு ஊழியர்களுக்கு சில சலுகைகளை முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். இதையடுத்து அரசு ஊழியர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டனர். வேலைநிறுத்த காலத்திற்கான ஊதியத்தை பிடித்தம் செய்வது தொடர்பாக அரசு எந்த உத்தரவும் பிறக்கப்படவில்லை.
ஆனால் ராமநாதபுரம் கலெக்டர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டோரிடம் ஊதியத்தை பிடித்தம் செய்ய உத்தரவிட்டார். இதனால் ராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டும் அரசு ஊழியர்களின் 10 நாட்கள் ஊதியம் பிடித்தம் செய்யப்பட்டது. மற்ற மாவட்டங்களில் எந்தவித உத்தரவும் பிறப்பிக்கப்படாததால் அரசு ஊழியர்களுக்கு முழு ஊதியம் வழங்கப்பட்டன.
அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் கணேசமூர்த்தி கூறியதாவது: வேலை நிறுத்த காலத்தையும் பணிக்காலமாக மாற்றப்படும் என, அரசு உறுதி அளித்தது. இதற்கான உத்தரவு வருவதற்கு முன்பே, ராமநாதபுரம் கலெக்டர் உத்தரவால் அரசு ஊதியர்களுக்கு 10 நாட்கள் ஊதியம் கிடைக்கவில்லை. அரசு உத்தரவு வந்துவிடும் என, எதிர்பார்த்தோம். அதற்குள் தேர்தல் தேதி அறிவிப்பட்டது. இதனால் 5 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டனர், என்றார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை