Ad Code

Responsive Advertisement

CPS:அரசு ஊழியர்களிடம் பிடித்தம் செய்த ரூ.14 ஆயிரம் கோடி பென்ஷன் பணம் அரசு கஜானாவில் பாதுகாப்பாக உள்ளது: நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தகவல்

புதிய ஓய்வூதியத் திட்டத்தின்கீழ் அரசு ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட ரூ.14 ஆயிரம் கோடி, அரசு கஜானாவில் வட்டியுடன் பாதுகாப்பாக உள்ளது என்று நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.சட்டப்பேரவையில் நேற்று இடைக்கால பட்ஜெட் மீது நடந்த விவாதம் வருமாறு:


குணசேகரன் (இந்திய கம்யூ னிஸ்ட்):
புதிய ஓய்வூதியத் திட் டத்தை தமிழக அரசு 2003-ம் ஆண்டு கொண்டு வந்தது. ஆனால், இதேதிட்டம் நாடாளுமன்றத்தில் 2004-ம் ஆண்டு கொண்டு வரப்பட்டபோது அதை எதிர்த்து அதிமுக வாக்களித்தது. புதிய ஓய்வூதியத் திட்டத்தின்கீழ் அரசு ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப் படும் பணம் பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்படுகிறது.பங்கு சந்தையின் ஏற்ற இறக்கம் காரண மாக ஓய்வூதியத் தொகைக்கு உத்தரவாதம் இல்லை. 


அதனால் தான் பழைய ஓய்வூதியத் திட் டத்தை அமல்படுத்த வேண்டும் என்று கோரி அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அரசு ஊழியர்களிடம் பிடித்தம் செய்த ரூ.14 ஆயிரம் கோடி எங்கு இருக்கிறது?நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல் வம்:அந்தப் பணம் அரசு கஜா னாவில்தான் இருக்கிறது.



குணசேகரன்:அரசு ஊழியர் களிடம் பிடித்தம் செய்த பணம், பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது. 


அமைச்சர் பன்னீர்செல்வம்: பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்யவில்லை. ரூ.14 ஆயிரம்கோடியும் அரசு கஜானாவில் வட்டி யுடன் பாதுகாப்பாக இருக்கிறது.


குணசேகரன்:கார்ப்பரேட் கம்பெனிகளின் வருகையால் மின் தேவை அதிகரித்து அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்யப்படுகிறது. அந்த நஷ் டத்தை யார் ஈடுகட்டுவது?


அமைச்சர் நத்தம் விஸ்வ நாதன்:மின்சார ஒழுங்குமுறை ஆணையம் நிர்ணயிக்கும் விலைக் குதான் மின்சாரம் கொள்முதல் செய்ய முடியும். கூடுதல் விலை கொடுத்து ஒருபோதும் மின்சாரம் கொள்முதல் செய்ய முடியாது. குடிசைகள், விவசாயம், நெசவா ளர்களுக்கு மட்டும் மின் கட்ட ணத்தில் சலுகை வழங்கப் படுகிறது. கார்ப்பரேட் கம்பெனி களுக்கு வழங்கப்படுவதில்லை.


குணசேகரன்:சமீபத்தில் ஏற் பட்ட வெள்ளம் நமக்கு படிப் பினையை கொடுத்துள்ளது. குடி சைகள் மட்டுமல்லாமல் நதியை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள மருத்துவமனைகள், கல்வி நிறு வனங்கள் உள்ளிட்ட ஆக்கிரமிப்பு களையும் அகற்ற வேண்டும்.



அமைச்சர் பன்னீர்செல்வம்:ஆக்கிரமிப்புகளை அளந்து சர்வே செய்து அவற்றை அகற்ற முதல்வர் உத்தரவிட்டுள்ளார். முதல் கட்டமாக கூவம் ஆற்றுப் பகுதியில் உள்ள குடிசைகள் அகற்றப்பட்டு, அங்கிருந்தவர்களில் 10 ஆயிரம் பேருக்கு மாற்று இடத்தில் வீடுகள் வழங்கப்பட்டுள்ளன. எதிர்காலத்தில் மீண்டும் ஆக்கிர மிப்பு செய்யாமல் இருக்கவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.இவ்வாறு விவாதம் நடந்தது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement