Ad Code

Responsive Advertisement

வி.ஏ.ஓ., தேர்வு தாள் மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தது யார்?

கிராம நிர்வாக அலுவலரான வி.ஏ.ஓ., தேர்வில், வினாத்தாள் எளிமையாக இருந்தது. இதில், 'மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்த ஆட்சி எது?' என்ற வினா இடம் பெற்றிருந்தது. வருவாய்த் துறையில் காலியாக உள்ள, 813 வி.ஏ.ஓ., பதவிகளுக்கு, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., சார்பில், நேற்று எழுத்து தேர்வு நடந்தது. 


சென்னை, பாரதி மகளிர் கல்லுாரி தேர்வு மையத்தில், டி.என்.பி.எஸ்.சி., தலைவர் அருள்மொழி, செயலர் விஜயகுமார், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி ஷோபனா ஆகியோர் பார்வையிட்டனர்.


பத்தாம் வகுப்பு பாடத்திட்டம் அடிப்படையில், நான்கு ஆண்டுகளுக்கு முந்தைய தகவல்களின் படியே, பெரும்பாலான வினாக்கள் இடம் பெற்றன. பெரும்பாலான வினாக்கள் எளிமையாக இருந்தாக, தேர்வர்கள் தெரிவித்தனர்.


கேள்விகள் என்ன?
* வண்டலுார் உயிரியல் பூங்காவில், தமிழக முதல்வர் சமீபத்தில் திறந்து வைத்த பூங்கா எது?


* தமிழகத்தில் மதிய உணவு திட்டம் எந்த ஆட்சியில் கொண்டு வரப்பட்டது?

* 'துாய்மை இந்தியா' திட்டத்தின் முக்கிய அம்சம் என்ன? போன்ற கேள்விகள், பொது அறிவு பகுதியில் இடம் பெற்று இருந்தன.

* விண்ணப்பித்தவர்கள் - 5.07 லட்சம் பெண்கள், 45 திருநங்கையர் உட்பட, 10.28 லட்சம் பேர்

* தேர்வு எழுதியவர்கள் - 7.77 லட்சம் பேர்

* தேர்வு நடந்த இடங்கள் - ௨௪௪; மையங்கள் - 3,566

* இணையம் மூலம் நேரடி கண்காணிப்பு - 43 மையங்கள்

* கண்காணிப்பாளர்கள் - 51 ஆயிரத்து, 385 பேர்; பறக்கும் படையினர், 411 பேர்; அரசின் பல துறைகளை சேர்ந்த, 3,300 பேர்.

எதிர்பார்த்ததை விட சுலபம்:எதிர்பார்த்ததை விட பாடத்திலும், பொது அறிவு பகுதியிலும் எளிமையான கேள்விகள் இடம் பெற்றன. தினசரி நடப்புகள் தெரிந்திருந்தால், முழுமையான மதிப்பெண் பெற முடியும்.
தேர்வர் விக்னேஷ்


பயிற்சி முக்கியம்:வினாத்தாள் எளிமையாக இருந்துள்ளது. பொது அறிவு, அறிவுத் திறன் சார்ந்த கேள்விகள் தான், அதிக அளவில் தேர்ச்சியை முடிவு செய்யும். முறையான பயிற்சி எடுத்த மாணவர்களுக்கு தேர்வு எளிதாகவே இருந்துள்ளது.
சாம் ராஜேஷ்வர் சென்னை, அப்போலோ பயிற்சி மைய தலைவர்

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement