Ad Code

Responsive Advertisement

ஒருநாள் ஊதியப்பிடித்தம் - உறுதியான தகவல் இல்லை: பிப்ரவரி மாத ஊதியம் தள்ளிப்போகும் !!

ஜாக்டோ போராட்டத்தில் கலந்துகொண்ட ஆசிரியர்களுக்கு ஒருநாள் ஊதியப் பிடித்தம் செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்ததாக செய்திகள் வெளியாகின. ஆனாலும் இது பற்றி அரசுதான் முடிவு எடுக்கும் என தெரிவித்திருந்தனர். இதுபற்றி இதுவரை உறுதியான தகவல் தெரியாததால், ஊதியப் பட்டியல் கோருவதிலும், வருமானவரிக்கான கணக்கீட்டுப் படிவங்களை பூர்த்தி செய்வதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.



ஒருநாள் ஊதியப் பிடித்தம் உறுதியானால், பிப்ரவரி மாத ஊதியத்தில் அடிப்படை ஊதியம், தனி ஊதியம், தர ஊதியம், அகவிலைப்படி, வீட்டுவாடகைப்படி, நகர ஈட்டுப்படி, மருத்துவப்படி, சிறப்புப்படி இவற்றை 29 ஆல் வகுத்து, ஒருநாள் ஊதியத்தை கழித்து ஊதியம் வழங்க வேண்டும்.



பிப்ரவரி மாத ஊதியப் பட்டியலுடன் வருமானவரி கணக்கீட்டுப் படிவங்களையும் ஆசிரியர்கள் அளிக்க வேண்டியிருப்பதால், ஊதியப் பட்டியல் கோருவதிலும், வருமானவரி கணக்கிடுவதிலும் குழப்ப நிலை காணப்படுகிறது.



வழக்கமாக பிப்ரவரி மாதத்தில் ஆசிரியர்களின் வருமானவரி படிவங்கள் சரிபார்க்கப் பட்டு, அதன் பின்னரே ஊதியம் வழங்கப்படும். இதனால் பிப்ரவரி மாத ஊதியம் தாமதமாக கிடைக்கும்.



தற்போது ஒருநாள் ஊதியப் பிடித்தம் பற்றிய குழப்பநிலை நிலவுவதால், பிப்ரவரி மாத ஊதியப் பட்டியல் தயாரிப்பதிலும், வருமானவரி கணக்கீட்டுப் படிவங்கள் தயாரிப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளதுடன், பிப்ரவரி மாத ஊதியம் கிடைப்பதில் மேலும் தாமதமாகும் நிலை உருவாகியுள்ளது. எனவே இதுபற்றி அரசு விரைவில் அறிவிக்க வேண்டும் என ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்..

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement