Ad Code

Responsive Advertisement

செட் தகுதித்தேர்வில் தேர்வர்கள் வினாத்தாள் எடுத்து வர தடை.

உதவிப் பேராசிரியர்களுக்கான, மாநில அரசின், செட் தகுதித்தேர்வில் வினாத்தாள் கொண்டுவர தடை விதிக்கப்பட்டதால், தேர்வர்கள் பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், பேராசிரியர் பணியில் சேருவதற்கான மாநில தகுதித் தேர்வான, செட் தேர்வு நேற்று நடந்தது.

மொத்தம் மூன்று தாள்கள் அடங்கிய தேர்வு, காலை, 9:30 மணி முதல் மாலை, 4:30 மணி வரை, மூன்று கட்டங்களாக நடந்தது. ஆங்கிலம் மற்றும் தமிழில் வினாத்தாள்கள் இருந்தன. ப்ளூ பிரின்ட் படி, கேள்விகள் இடம்பெறவில்லை. நான்கு வகை வினாத்தாளுக்கு பதில், ஒரேவினாத்தாளே வழங்கப்பட்டது. தேர்வு அறைக்குள் பறக்கும் படை அமைக்கப்படவில்லை. 



நெட் தேர்வை போல், செட் தேர்விலும் விடைத்தாள் நகல் வழங்க, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது; இதுகுறித்து தேர்வு மையத்தில் எந்த அறிவிப்பும் இல்லை; தேர்வு முடிந்ததும் விடைத்தாளுடன் வினாத்தாளையும் எடுத்துச் சென்றதால், தேர்வர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இவ்வாறு, தேர்வை அவசரமாக அறிவித்து நடத்தியதால், தேர்வு நடைபெறுவதில் சில குழப்பங்கள் நிலவியது. இவ்வித பிரச்னைகளை பல்கலை அதிகாரிகள் தற்போதே முன்னெச்சரிக்கையுடன் சரி செய்ய வேண்டும் என்று நெட், செட் தேர்வர்கள் சங்க ஆலோசகர் கூறியுள்ளனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement