ராஜஸ்தானை சேர்ந்த பள்ளி மாணவர் ஒருவர், பெண்களுக்கான தற்காப்பு கருவியை கண்டுபிடித்துள்ளார். பெண்களிடம் யாராவது அத்துமீறலில் ஈடுபட்டால், அந்த நபர் மீது, அதிக அழுத்தத்தில் மின்சாரம் பாயும் வகையில், கையுறையை அந்த மாணவர் தயாரித்துள்ளார்.
மாணவர் நிரஞ்சன் சுதர், 17, எலக்ட்ரானிக் சாதனங்களில் அதிக ஈடுபாடு கொண்டவர். டில்லியில், நான்காண்டுகளுக்கு முன், 24 வயது மருத்துவ மாணவி, ஒடும் பஸ்சில், ஆறு பேர் கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட செய்தியை கேள்விப்பட்டு, பெண்களின் பாதுகாப்புக்கு உதவும் எலக்ட்ரானிக் கருவியை தயாரித்துள்ளார்.இந்த கருவியை, கைகளில் அணியும், 'கிளவுஸ்' போல பெண்கள் அணிந்து கொள்ளலாம். இதில், 'சிம்' கார்டு, ஜி.பி.எஸ்., கருவி, வீடியோ கேமரா, 3.4 வோல்ட் திறனுடைய பேட்டரி, இந்த சக்தியை, 220 வோல்ட் திறனுக்கு உயர்த்தக்கூடிய, 'ஆம்ப்ளிபையர்' போன்றவை உள்ளன.
இதற்கு, 'ஷாக்கிங் கிளவுஸ்' எனப் பெயரிடப்பட்டுள்ளது.இதை கையில் அணிந்த பெண்ணை, யாராவது பலாத்காரம் செய்ய முற்பட்டால், அதில் உள்ள சுவிட்சை அழுத்தினால் போதும்; அடுத்த நொடிகளில், 220 வோல்ட் திறன் மின்சாரம், பலாத்காரம் செய்பவனின் உடலில் பாய்ந்து அவனை, நிலைகுலையச் செய்து விடும்.
அத்துடன், கிளவுசில் பொருத்தப்பட்டுள்ள கேமரா, அந்த இடத்தை புகைப்படம் எடுக்கும். அப்படத்துடன், உதவி கேட்கும் வகையிலான வாசகத்துடன், அருகில் உள்ள போலீஸ் நிலையத்துக்கு, எஸ்.எம்.எஸ்., சென்றடையும்.ராஜஸ்தான் மாநில அளவில், கடந்த மாதம் நடந்த அறிவியல் கண்காட்சியில், ஷாக்கிங் கிளவுஸ், முதல் பரிசை வென்றது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை