Ad Code

Responsive Advertisement

'செட் தேர்வு குளறுபடி நீக்காவிட்டால் வழக்கு'

கல்லுாரிகளில், உதவிப் பேராசிரியர் பணிக்கான, 'செட்' தகுதித்தேர்வு, பிப்., 21ல் நடக்கிறது. இந்த தேர்வு நடைமுறையிலுள்ள குளறுபடிகளை நீக்க, முதுகலை பட்டதாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து, தமிழ்நாடு, 'நெட், ஸ்லெட்' சங்க தலைவர் தங்க முனியாண்டி, பொதுச் செயலர் நாகராஜன் உட்பட சிலர்,தமிழக அரசு மற்றும் பல்கலை மானிய குழுவான, யு.ஜி.சி.,க்கு மனு அனுப்பியுள்ளனர்.
அதில் கூறியுள்ளதாவது:

'நெட்' தேர்வு விதிப்படியே, 'செட்' தேர்வை நடத்த வேண்டும். ஆனால், தெரசா பல்கலை அறிவிப்பில் குளறுபடிகள் உள்ளன. நுாலக அறிவியல், இசை மற்றும் உடற்கல்வியியல் பாடங்கள், தேர்வு பட்டியலில் புறக்கணிக்கப்பட்டு உள்ளன. பல கல்லுாரிகளில் காலியாக உள்ள இந்த பாடங்களில் பேராசிரியராக சேர, 'செட்' தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.எனவே, விடுபட்ட பாடங்களை உடனே சேர்க்க வேண்டும்; தேர்வு கட்டணத்தை குறைக்க வேண் டும். 'நெட்' தேர்வு போல், தேர்வு முடிவில் மாணவர்களுக்கு விடைத் தாள் நகல் வழங்க வேண்டும்.



மூன்று மாத அவகாசம் கிடைக்கும்படி, தேர்வு தேதியை மாற்ற வேண்டும். தேர்வு பணிகளை, அண்ணா பல்கலை போன்ற பிற பல்கலை மூலம் மேற்கொள்ளக் கூடாது. இவ்வாறு கோரிக்கை விடுத்து உள்ளனர். சங்க நிர்வாகிகள் இதுபற்றி கூறுகையில், 'இந்த மனு மீது அரசு நடவடிக்கை எடுக்க தாமதம் செய்தால், சட்டரீதியாக வழக்கு தொடர்வோம்' என்றனர். 

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement