Ad Code

Responsive Advertisement

மாணவர்களின் கணித, அறிவியல் திறனை அதிகரிக்க புதிய திட்டம்: தமிழகத்தில் துவக்கம்

பள்ளி மாணவர்களின் கணித, அறிவியல் திறனை அதிகரிக்க மத்திய அரசின் புதிய திட்டமான 'ராஷ்ட்ரிய ஆவிஸ்கார் அபியான்' திட்டம் தமிழகத்தில் துவங்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களின் கணித, அறிவியல் திறனை அதிகரிக்க வேண்டும் என பல்கலைக்கழக மானியக்குழு மத்திய மனித வளத்துறை அமைச்சகத்திற்கு பரிந்துரைத்தது.

அதற்காக பல்கலைகள், பள்ளி நிர்வாகத்துடன் ஒத்துழைக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்தது.இதனால் மத்திய மனித வளத்துறை அமைச்சகம் நாடு முழுவதும் அனைவருக்கும் தேசிய கண்டுபிடிப்பு இயக்கத்தை (ராஷ்ட்ரிய ஆவிஸ்கார் அபியான்) அறிமுகம் செய்தது. டில்லி மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் இந்த திட்டம் ஏற்கனவே ஐந்து மாதங்களுக்கு முன் அறிமுகமாகியது. தமிழகத்தில் நேற்று 18 கல்வி மாவட்டங்களில் துவங்கப்பட்டது.



இதன்மூலம் இளம் விஞ்ஞானிகளாக மாணவர்கள் உருவாக்கப்பட உள்ளனர். இதுதவிர அறிவியல், கணித பாடங்களில் மாணவர்களுக்கு ஈடுபாட்டை அதிகரிப்பது, கண்டுபிடிப்பு திறன்களை வெளிக்கொணர்வது உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் உள்ளன.தமிழகத்தில் பள்ளிக்கல்வித் துறையில் அனைவருக்கும் இடைநிலை கல்வித் திட்டத்தின் கீழ் இந்த திட்டம் துவங்கப்பட்டது. நேற்று திண்டுக்கல் சின்னாளபட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் துவக்க விழா நடந்தது.



இதில்மெட்ரிக் பள்ளிகளின் ஆய்வாளர் மேரி தலைமை வகித்தார். பள்ளி தலைமையாசிரியர் வேளாங்கன்னி ஒருங்கிணைப்பாளர்கள் சேசுராஜா பயாஸ், ராஜா முன்னிலை வகித்தனர்.சேசுராஜாபயாஸ் கூறியதாவது: கணிதம், அறிவியல் கற்பித்தலில் எளிமையும், மாணவர்களின் திறன்களை மேம்படுத்தவும் இந்த திட்டம் பயனளிக்கும். இதன்மூலம் புதிய கண்டுபிடிப்பாளர்கள் உருவாக வாய்ப்புகள் அதிகம், என்றார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement