Ad Code

Responsive Advertisement

போட்டித்தேர்வு அறிவுரை மையமாக மாறும் வேலை வாய்ப்பு அலுவலகம் பதிவு செய்து காத்திருப்போர் நிலை?

மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிந்து, வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்களை அழைத்து, பல்வேறு போட்டித் தேர்வுகளை எழுத அறிவுறுத்த வேண்டும் என, அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 


தமிழகத்தில் 32 மாவட்டத்திலும் படித்த லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிந்து,அரசு வேலைக்காக காத்திருக்கின்றனர். நம்பிக்கையில் 70 சதவீதத்தினருக்கு மேல் தங்களது பதிவை தொடர்ந்து புதுப்பித்து வருகின்றனர். பதிவு மூப்பு அடிப்படையில் வேலை பெறுவதை விட, போட்டித் தேர்வை எழுதி, அரசு வேலைக்கு செல்ல வழிகாட்டியாக வேலை வாய்ப்பு அலுவலகம் சார்பில், தன்னார்வ பயிலகங்கள் செயல்படுகின்றன. இவற்றின் மூலம் சிலர் பயன்பெறுகின்றனர்.



இந்நிலையில் பிளஸ் 2, டிகிரி, டிப்ளமா பதிவுதாரர்களை போட்டித் தேர்வு எழுத உற்சாகப்படுத்தும் அறிவுரை வழங்கும் திட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு வேலை வாய்ப்பு அலுவலகத்திலும் தாலுகா வாரியாக பதிவுதாரர்கள் சான்றுகளுடன் நேரில் வரவழைக்கப்படுகின்றனர். அரசு வேலைக்கு பரிந்துரைக்க அழைக்கின்றனர் என்ற ஆர்வத்தில் பதிவுதாரர்கள் வருகின்றனர். அவர்களிடம் போட்டித் தேர்வுகளை எழுதி வேலை வாய்ப்பு பெற அறிவுரை கூறுவதால் வேலை வாய்ப்பற்றோர் எரிச்சலடைகின்றனர்.


வேலை வாய்ப்பு அலுவலர் ஒருவர் கூறுகையில், “ எங்களிடம் பதிவு மூப்பு பட்டியல் பெற்றாலும், நேரடி விண்ணப்பம் பெற்று ஆட்களை தேர்வு செய்யும் முறையே நடைமுறையாகும் நிலை உள்ளது. படித்த ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு போட்டித் தேர்வு குறித்து அறிவுரையை கூறி, அரசு வேலைக்கு வழி காட்ட வேலை வாய்ப்பு இயக்குனரகம் வலியுறுத்தி யுள்ளது. இதற்காக பதிவுதாரர்களை அலைபேசியில் அழைத்து அறிவுறுத்தும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது,” என்றார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement