Ad Code

Responsive Advertisement

தேசிய மக்கள் தொகை பதிவேட்டில் ஒரே கதவு எண்ணில் பல வீடுகள் ஆசிரியர்கள் தவிப்பு

தேசிய மக்கள் தொகை பதிவேடு சரிபார்ப்பில் ஒரே கதவு எண்ணில் பல வீடுகள் இருப்பதால் பணியை முடிக்க முடியாமல் ஆசிரியர்கள் தவிக்கின்றனர்.தேசிய மக்கள் தொகை பதிவேடு சரிபார்க்கும் பணி ஜன., 18 முதல் பிப்., 5 வரை நடந்தது. இதில் ஆசியர்கள் வீடு, வீடாக சென்று ஏற்கனவேதேசிய மக்கள் தொகை பதிவேட்டில் உள்ள தவறுகளை சரிசெய்தனர்.

மேலும் ஆதார் எண், ரேஷன்கார்டு எண், அலைபேசி எண் விபரங்களையும் பெற்றனர். தேசிய மக்கள் தொகை பதிவேட்டில் விடுளபட்டோரிடம் புதிதாக விபரங்கள் பெறப்பட்டன. இந்த கணக்கெடுப்பில் ஒரே கதவு எண்ணில் பலவீடுகளும், ரேஷன் கார்டுகளில் குளறுபடியும் இருப்பது தெரியவந்தது. இதனால் காலக்கெடு முடிந்த நிலையிலும் பணியை முழுமையாக முடிக்க முடியாமல் ஆசிரியர்கள் தவிக்கின்றனர்.


ஆசிரியர்கள் கூறியதாவது: கல்வி பாதிக்காமல் இருக்க மாலை 3 மணிக்கு பின்பே கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டோம். பெரும்பாலானோருக்கு 600 வீடுகள் வரை கணக்கெடுக்க கொடுத்தனர். சில இடங்களில் ஒரே கதவு எண்ணில் பல வீடுகள் உள்ளன. இந்த குளறுபடியால் பணியை முடிக்க முடியாமல் தவிக்கிறோம். விரைவில் கணக்கெடுப்பு விபரங்களை ஒப்படைக்குமாறு அதிகாரிகள் வற்புறுத்தி வருகின்றனர், என்றார். 

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement