Ad Code

Responsive Advertisement

8ம் வகுப்பு தனித்தேர்வு அறிவிப்பு

தனித்தேர்வர்களுக்கு 8ம்வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரலில் நடக்கவுள்ளது. இதை எழுத விரும்புவோர் பிப்.18 முதல் 29 வரைwww.tndge.inஎன்ற இணையளத்தில் பதிவு செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. பனிரெண்டரை வயது பூர்த்தியடைந்த தனித்தேர்வர்கள் இத்தேர்வு எழுதலாம்.

தேர்வு கட்டணம் ரூ.125 மற்றும் 'ஆன்லைன்' விண்ணப்பத்தினை பதிவு செய்யும் கட்டணம் ரூ.50 ஐ சேவை மையங்களிலேயே நேரடியாக செலுத்தலாம். விண்ணப்பத்துடன் பள்ளி மாற்றுச்சான்றிதழ் நகல் அல்லது பதிவுத்தாள் நகல் அல்லது பிறப்புச்சான்றிதழ் நகல் இவற்றில் ஏதேனும் ஒன்றினை இணைத்து சமர்ப்பிக்க வேண்டும். ஆன்லைன் மூலம் பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும். தபால் மூலம் பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும், என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement