கடல் சங்குகளில் கிடைக்கும் கால்சியத்தை இயற்கை உரமாக பயன்படுத்த முடியும்' என, ஆய்வு செய்த ராமநாதபுரம் மாணவர்கள் ௫ பேருக்கு 'இளம் விஞ்ஞானி' விருது கிடைத்தது.தேசிய அறிவியல் இயக்கம் சார்பில் சண்டிகாரில் 23வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடுநடந்தது. இதில் ராமநாதபுரம் வேலுமாணிக்கம் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் ஜோஸன்ஹாரிஸ், ரங்கராஜா, சிவமதிபிரியா,அமிர்தா, கவியரசன் 'இளம் விஞ்ஞானி' விருது பெற்றனர்.
இந்த விருது அவர்கள் சமர்ப்பித்த 'சங்குகளில் கிடைக்கும் கால்சியத்தை இயற்கை உரமாக பயன்படுத்தலாம்'என்ற ஆய்வு கட்டுரைக்காக கிடைத்தது.மேலும், இந்த கட்டுரை மைசூருவில் 20 ஆயிரம் விஞ்ஞானிகள் பங்கேற்ற சர்வதேச அறிவியல் மாநாட்டிலும்ஏற்றுக் கொள்ளப்பட்டது. விருது பெற்ற மாணவர்கள், விழிகாட்டுதல் ஆசிரியர்கள் தமயந்தி, பாலகிருஷ்ணனை தாளாளர் மனோகரன், முதல்வர் பரிமளா பாராட்டினர்.
மாணவர்கள் கூறியதாவது: கடல் சங்குகளை வெப்பப்படுத்தி கிடைக்கும் கால்யசியத்தை உரமாக பயன்படுத்தினால், தாவரங்களின் வளர்ச்சி வேகமாக இருக்கும். இது, இயற்கை உரம்; சுற்றுச்சூழலை பாதிக்காது. இதை பயன்படுத்திய தாவரங்களில் கிடைக்கும் காய், கனி, விதைகளிலும் கால்சியம் சத்து அதிகமாக இருக்கும். இவற்றை சாப்பிடுவதால் எலும்புக்கு நல்ல வலிமை கிடைக்கும்,என்றனர்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை