Ad Code

Responsive Advertisement

பிளஸ்–2 தேர்வுக்கு தட்கல் மூலம் விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் இன்று முதல் ‘ஹால்டிக்கெட்’ பதிவிறக்கம் செய்யலாம் அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு.

அரசு தேர்வுகள் இயக்ககத்தின் இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:– மேல்நிலை பொதுத்தேர்வு (பிளஸ்–2) எழுத, சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ் (தட்கல்) மூலம் கடந்த 2–ந்தேதி முதல் 4–ந்தேதி வரை விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் 23–ந்தேதி (இன்று) முதல் 25–ந்தேதி வரை www.tndge.com என்ற இணையதளத்தின் மூலம் தேர்வுக் கூட நுழைவுச் சீட்டுகளை(ஹால்டிக்கெட்) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மேற்கண்ட இணையதளத்திற்குச் சென்று தங்களது விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியினை, பதிவுசெய்தால், அவர்களுடைய தேர்வுக் கூட அனுமதிச் சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மொழிப் பாடங்களில் கேட்டல், பேசுதல் திறன் தேர்வு, சிறப்பு மொழி (தமிழ்) பாடத்தில் கேட்டல், பேசுதல் திறன் தேர்வு மற்றும் செய்முறைத் தேர்வுக்கான தேதி குறித்த விவரத்தைத் தனித்தேர்வர்கள் தமக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தேர்வு மையத்தின் முதன்மைக் கண்காணிப்பாளரை அணுகி அறிந்து கொள்ள வேண்டும்.



உரிய தேர்வுக்கூட அனுமதிச் சீட்டின்றி எந்த ஒரு தேர்வரும் தேர்வெழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள்.ஏற்கனவே உரிய நேரத்தில் மேல்நிலைத் தேர்வெழுத ஆன்லைனில் விண்ணப்பித்து தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுகளை இதுவரையிலும் பதிவிறக்கம் செய்துக் கொள்ளாத தனித்தேர்வர்களும் மேற்குறிப்பிட்ட இணையதளத்தின் மூலம் உடனடியாக தேர்வுக்கூட அனுமதிச்சீட்டுகளை பதிவிறக்கம் செய்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement