Ad Code

Responsive Advertisement

ரூ.251க்கு உலகின் குறைந்த விலை ஸ்மார்ட்போன்

உலகின் விலை குறைந்த விலை ஸ்மார்ட் போன் நாளை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. மத்திய அரசின் மேக் இன் இந்தியா திட்டத்தை ஆதரிக்கும் விதமாக ரிங்கிங் பெல்ஸ் என்ற இந்திய நிறுவனம், ரூ.251 க்கு இந்த ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது.


இந்தியாவின் ஸ்மார்ட் போன் தயாரிப்பு நிறுவனமான ரிங்கிங் பெல்ஸ் நிறுவனமும், மத்திய அரசும் இணைந்து அறிமுகம் செய்ய உள்ள இந்த ஸ்மார்ட்போனுக்கு "ப்ரீடம் 251" என பெயரிடப்பட்டுள்ளது. இந்த குறைந்த விலை ஸ்மார்ட் போனை www.freedom251.com என்ற இணையதளத்தின் மூலம் பெறலாம்.


இந்த புதிய மாடல் ஸ்மார்ட்போனை மத்திய அமைச்சர் மனோகர் பாரிக்கர் இன்று மாலை அறிமுகம் செய்து வைக்க உள்ளார். இதன் விற்பனை ஆன்லைனில் நாளை காலை 6 மணிக்கு துவங்கி பிப்ரவரி 20ம் தேதி இரவு 8 மணி வரை நடைபெற உள்ளது.


ப்ரீடம் 251 ல் இடம் பெற்றுள்ள சிறப்பம்சங்கள் :
* 960x540 பிக்செல் திறன் கொண்ட 4 இன்ச் திரை.


* 1 ஜிபி ராம், 8 ஜிபி சேமிப்பு திறன், 32 ஜிபி வரை விரிவாக்கும் திறன்.


* 3.2 எம்பி, கேமிரா. 0.3 எம்பி, முன்புற கேமிரா.


* 3 ஜி இன்டர்நெட் பிரவுசிங்


* பெண்கள், விவசாயிகள், மீனவர்கள் உள்ளிட்டோருக்கு பயனளிக்கும் வகையிலான ஆப்ஸ் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. வாட்ஸ்அப், பேஸ்புக், யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதள ஆப்ஸ் மற்றும் கூகுள் பிளே ஸ்டோர் உள்ளிட்ட ஆப்ஸ் வசதிகளும் உள்ளன.


* 1450 எம் ஏஹச் பேட்டரி.


* ஒரு வருட உத்தரவாதம். இதில் குறைபாடுகள் ஏற்பட்டால் சரி செய்வதற்காக நாடு முழுவதும் 650 சேவை மையங்களை ரிங்கிங் பெல்ஸ் நிறுவனம் அமைக்க உள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement