Ad Code

Responsive Advertisement

இந்தாண்டு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு 14 இலக்க நிரந்தர எண்

தமிழகத்தில் வரும் மார்ச் மாதம் பொதுத்தேர்வுகள் நடக்க உள்ளது. இதில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வை 11 லட்சத்து 79 ஆயிரத்து 500 பேர் எழுதுகின்றனர். பிளஸ் 2 தேர்வை 8 லட்சத்து மேற்பட்டவர்களும் எழுத உள்ளனர். பொதுத்தேர்வு விடைத்தாள் முதல் பக்கத்தில் மாணவர்களின் புகைப்படம், பார்கோடிங் முறை என அடுத்தடுத்து தேர்வு துறை சார்பில் புதிய நடைமுறை அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு முதன்முறையாக 14 இலக்கம் கொண்ட நிரந்தர யுனிக் ஐடி எண் மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளது. 


இதில் எந்த வகுப்பு, தேர்வு எழுதும் மாதம், ஆண்டு, மாவட்ட கோடு எண், ரெகுலர் என்றால் ஆர், பிரைவேட் என்றால் பி ஆகிய ஏழு குறியீடுகளுடன் 14 இலக்க எண்களும் வழங்கப்படும்.
 


இதன் மூலம் மார்ச் தேர்வுக்கு பின் அக்டோபரில் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தனியாக பதிவு எண் வழங்காமல், யுனிக் ஐடி எண்களையே பயன்படுத்தலாம், இதன் மூலம் மாணவர்களுக்கு ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழ் கிடைக்கும். அதேபோல் 10ம் வகுப்பில் வழங்கப்படும் இதே எண்ணை பிளஸ் 2 தேர்விலும் பயன்படுத்த திட்டமிடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு முதல் மாணவர்களின் பதிவு எண் போன்று விடைத்தாளின் முதல் பக்கத்திலும், மதிப்பெண் சான்றிதழ்களிலும் யுனிக் ஐடி எண்ணும் இடம்பெறும்.



ஹால் டிக்கெட்டில் எச்சரிக்கை: துண்டுத்தாள் வைத்திருத்தல், பிற மாணவர்களை பார்த்து எழுதுதல், துண்டுத்தாளை பார்த்து எழுதுதல் உள்ளிட்ட நிகழ்வுகள் ஒழுங்கீன செயல்களாக கருதப்பட்டு, அதற்குரிய தண்டனைகள் வழங்கப்படும் என்று ஹால் டிக்கெட்டில் முதன்முறையாக அச்சிடப்பட உள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement