Ad Code

Responsive Advertisement

100–க்கு 100 மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு ரூ.10 ஆயிரம் பரிசு

சென்னை மாநகராட்சி பட்ஜெட் கூட்டம் இன்று நடைபெற்றது. நிதிக்குழு தலைவர் சந்தானம் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் கூறி இருப்பதாவது:–சென்னைப் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர்கள் தாங்கள் விரும்பிய பாடத்தை மேல்நிலைப் பள்ளிகளில் தேர்ந்தெடுத்து படிக்கஅவர்கள் அதிக மதிப்பெண்கள் எடுக்க வேண்டியது அவசியமாகிறது.

அதனால் 3 பாடங்களில் 100க்கு 100 மதிப்பெண்கள் வாங்கும் மாணவர்களை ஊக்குவிப்பதாக அறிவித்தால் மாணவ–மாணவியர்கள் அனைத்து பாடங்களையும் முழு கவனத்துடன் படிப்பதற்கு வாய்ப்பு ஏற்படும்.



எனவே பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் ஏதேனும் 3 பாடங்களில் 100க்கு 100 மதிப்பெண் பெறும் மாணவ–மாணவியர்களுக்கு ரூ.10,000 ஊக்கப் பரிசும், பயிற்றுவித்த பாட ஆசிரியர்களுக்கும் தலா ரூ.5000 ஊக்கத் தொகை வழங்கப்படும்.பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் ஏதேனும் 3 பாடங்களில் மொத்த மதிப்பெண்கள் 595/600 அல்லது அதற்கு மேல் மதிப்பெண் பெறும் மாணவ– மாணவியர்களுக்கு ரூ.10,000 ஊக்கப் பரிசு வழங்கப்படும். பயிற்றுவித்த பாட ஆசிரியர்களுக்கும் தலா ரூ.5000 ஊக்கத் தொகை வழங்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement