Ad Code

Responsive Advertisement

முறைகேடு புகார் - தர்மபுரி DEEO., சஸ்பெண்ட்

பல்வேறு முறைகேட்டில் ஈடுபட்டதாக, தர்மபுரி மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். தர்மபுரி மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் மணி, இடைநிலை ஆசிரியர்கள் பணியிடை மாற்றம், பதவி உயர்வு, மற்றும் அலுவலக பணியிடங்கள் உட்பட பல்வேறு பணிகளுக்கு லஞ்சம் பெற்று வருவதாக, பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பனுக்கு புகார் சென்றது. 


இப்புகார் குறித்து நடந்த விசாரணையில், மணி, முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, நேற்று முன்தினம் மணியை, பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன், அவரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

போலியாக ஜாதி, கல் விச்சான்றிதழ் கொடுத்து, ஆசிரியர் பணிக்கு சேர்ந்தது தொடர்பாக பாலக்கோடு பாரதியார் நகரை சேர்ந்த முனியப்பன் கைது செய்யப்பட்டதை அடுத்து, ஆசிரியர்களின் சான்றிதழ்கள் சரி பார்க்கப்பட்டு வருகிறது. 

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement