Ad Code

Responsive Advertisement

அரையாண்டு தேர்வு: கல்வித்துறை சர்க்குலர்

துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில், 11ம் தேதி முதல் அரையாண்டுத் தேர்வுகளை நடத்த,தொடக்கக் கல்வி துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கீழ்,இயங்கும் பள்ளிகளில், 1முதல், 8ம் வகுப்பு மாணவர்களுக்கான இரண்டாம் பருவத் தேர்வுகள் வரும், 11ம் தேதி முதல், 27ம் தேதி வரை,நடத்த வேண்டும். இதன்படி,உதவி மற்றும் கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் வாயிலாக, அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும். தேர்வுக்கான ஆயத்தப்பணிகளை மேற்கொள்ள,அனைத்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு,சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement