Ad Code

Responsive Advertisement

ஒரே நாளில் இரு தேர்வுகள்!

பொறியியல் பட்டம் பெற்றவர்கள், முதுநிலை பொறியியல் பட்டம் படிக்கவும், இந்திய எண்ணெய் நிறுவனங்கள் உள்ளிட்ட, 18 துறைகளில் பொறியாளர் பதவிகளில் சேரவும், 'கேட்' தேர்வு எழுத வேண்டும்; இத்தேர்வு, இம்மாதம் 31ல் நடக்கிறது.
இந்த தேர்வுக்காக, ஓராண்டுகளுக்கு மேல், பயிற்சி மற்றும் தயாரிப்புப் பணிகளில், பொறியியல் பட்டதாரிகள் ஈடுபட்டு உள்ளனர். இத்தேர்வு, ஆன் - லைன் மூலம் நடத்தப்படுகிறது. இந்நிலையில், தமிழ்நாடு மின் வாரிய பொறியாளர் பதவிக்கான தேர்வுகளை, தமிழ்நாடு பணியாளர் தேர்வு ஆணையம் அறிவித்துள்ளது. இத்தேர்வும், 31ல்நடத்தப்படுகிறது. பொறியியல் பட்டதாரிகள் கூறியதாவது:' கேட்' தேர்வுபொறியியல் பட்டதாரிகளுக்கு மிக முக்கியமான தேர்வு. பொறியியல் மேற்படிப்போடு மத்திய அரசு துறை பதவிகளுக்கும், இத்தேர்வு மதிப்பெண் கணக்கில் கொள்ளப்படுகிறது.

இந்நிலையில், டிச., 28ல் அறிவிப்பு வெளியிட்டு, ஜன.,31ல், தமிழ்நாடு மின் வாரிய பொறியாளர் பதவிக்கான தேர்வை நடத்துகின்றனர். மிகக் குறைவான இடைவெளியில், தமிழக அரசு இத்தேர்வை அறிவித்துள்ளது. 'கேட்' தேர்வு அகில இந்திய அளவில் நடப்பது; அதனால், தள்ளிப்போக வாய்ப்பில்லை. ஆனால், மின் வாரிய தேர்வை தள்ளி வைக்க முடியும். இவ்வாறு அவர்கள் கூறினார்.- 

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement