Ad Code

Responsive Advertisement

அரசு அலுவலகங்களுக்கு இலவச இணையதள இணைப்புகள்: ஒரு மாதத்துக்குள் முடிவெடுக்க தமிழக அரசுக்கு உத்தரவு

தனியார் நிறுவனங்களிடம் இருந்து அரசு அலுவலகங்களுக்கு இலவச இணையதள இணைப்புகளைப் பெறுவது தொடர்பான மனு மீது ஒரு மாதத்துக்குள் முடிவெடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

தமிழக அரசு கடந்த 2000-ஆம் ஆண்டு மே மாதம் 4-ஆம் தேதி ஒரு அரசாணை பிறப்பித்தது. அந்த அரசாணைப்படி, தமிழகம் முழுவதும் சாலைகளில் பள்ளம் தோண்டி தொலைத் தொடர்பு நிறுவனங்கள் கேபிள் வயரைபதித்துக் கொள்ளலாம். அதற்காக, தொடர்புடைய தனியார் நிறுவனங்கள் அரசுக்கு எந்தக் கட்டணமும் செலுத்தத் தேவையில்லை. அதற்கு பதில், அந்தப் பகுதிகளில் உள்ள அரசு அலுவலகங்களுக்கு 20 ஆண்டுகளுக்கு இலவசமாக 2 எம்.பி.பி.எஸ் வேகத்தில் செயல்படும் இணையதள இணைப்புகளை வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.


இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.கே.கெüல், நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா ஆகியோர், மனுதாரர் அளித்த மனு மீது தமிழக அரசு ஒரு மாதத்துக்குள் முடிவெடுத்து, இந்த உத்தரவை நிறைவேற்றியதற்கான அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர். 

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement