Ad Code

Responsive Advertisement

தங்கம் வென்றதமிழக சிறுவன்!

தேசிய துப்பாக்கி சுடும் போட்டியில், தமிழகத்தை சேர்ந்த ரித்திக், தங்கம் வென்று சாதனை படைத்தான்.சென்னையை சேர்ந்தவர் ரமேஷ்; எலக்ட்ரீசியன். அவரது மகன் ரித்திக், 14. கேந்திரிய வித்யாலயா பள்ளியில், 9ம் வகுப்பு படிக்கிறான். மத்திய பிரதேசத்தில் உள்ள இந்துாரில், தேசிய துப்பாக்கி சுடும் போட்டி, 2015 டிச., 27ல் நடந்தது. 


இதில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில், 14 வயதுக்கு உட்பட்டோருக்கான, துப்பாக்கி சுடும் போட்டியில் பங்கேற்ற ரித்திக், தங்கம் வென்றான்.ரித்திக்கை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் பிரதீப் யாதவ் பாராட்டினார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement