Ad Code

Responsive Advertisement

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யும் வசதி உள்ளது. அதன்படி, 2014ல், மூன்று லட்சம், 2013ல், 2.35லட்சம், 2012ல், 2.01 லட்சம் புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

ஆனால், பல புகார்கள் பொய்யாகவும், பழிவாங்கும் நோக்கிலும் தெரிவிக்கப்படுவதால், அரசு அதிகாரிகள் மீது தேவையில்லாமல் விசாரணை நடத்த வேண்டியது நேரிடுகிறது.
எனவே, இனி புகார் அளிப்பவர்கள்,தங்கள் ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும் என்று, மத்திய அரசு அறிவித்துள்ளது.இது போன்ற புகார்களை, பிரதமர் மோடி நேரடியாக கண் காணித்து, அரசு நிர்வாகத்தை மேம்படுத்த, சம்பந்தப்பட்ட துறைச் செயலர்களுடன் ஆய்வு செய்து வருகிறார். தேவையில்லாத புகார்களை குறைக்கும் வகையில், ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும் என, கூறப்பட்டுள்ளது. ஆனாலும், இது கட்டாயமில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement