Ad Code

Responsive Advertisement

பாரம்பரிய தின்பண்டங்கள் பள்ளிகளுக்கு திடீர் உத்தரவு

பள்ளிகளிலும், பள்ளி அருகிலும் பாரம்பரியமான தின்பண்டங்களையே விற்க வேண்டும். உடல் எடையை அதிகரிக்கும், 'ஸ்நாக்ஸ்' வகைகளை தவிர்க்க, பள்ளி நிர்வாகங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு உத்தர விடப்பட்டுள்ளது. 


அதிக எடை, சோம்பல், சக்தி குறைவு, ரத்த சோகை மற்றும் சிவப்பணுக்கள் குறைவு போன்ற பல பிரச்னைகள், மாணவர்களிடம் காணப்படுகின்றன. இதற்கான காரணங்கள் குறித்து, மத்திய அரசு ஆய்வு நடத்தியதில், குழந்தைகள் உட்கொள்ளும் உணவில் தான் பிரச்னை என்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அனைத்து, சி.பிஎஸ்.இ., பள்ளிகளுக்கும், சி.பி.எஸ்.இ., செயலர் ஜோசப் இமானுவேல் கடிதம் அனுப்பியுள்ளார்.அதன் விவரம்: 


பெரும்பாலான மாணவர்கள், வீட்டிலிருந்து, 'ஸ்நாக்ஸ்' மற்றும் மதிய உணவு கொண்டு வருவதற்கு பதில், கேன்டீனில் வாங்குகின்றனர். கேன்டீன்களில் சத்தில்லாத, கொழுப்பு சத்து நிறைந்த, பேக்கரி தின்பண்டங்கள் தான் விற்கப் படுகின்றன.எனவே, இதுபோன்ற தின்பண்டங்களை பள்ளிகளிலும், பள்ளிக்கு வெளியிலும் விற்க அனுமதிக்க கூடாது; மாணவர்களும் இந்த உணவு பொருட்களை கொண்டு வரவோ, சாப்பிடவோ கூடாது. பாரம்பரிய உணவுகளான பயறு வகைகள், காய், கனிகள், அரிசி, கோதுமை, பார்லி உணவுகள் போன்றவற்றை, பேக்கரி பொருட்களுடன் சேர்க்காமல் சாப்பிட அறிவுறுத்த வேண்டும்.



மேலும், மாணவர்கள், 'டிவி' பார்ப்பதை தவிர்க்க வேண்டும். காலை, மாலை வேளையில், சைக்கிள், நீச்சல், கால்பந்து போன்ற விளையாட்டுகளை பழக வேண்டும்; தெம்பு தரும் விளையாட்டுக்களை விளையாட அனுமதிக்க வேண்டும்.பள்ளிகளில் உணவு மேலாண் கமிட்டி அமைக்க வேண்டும்; ஆரோக்கிய உணவு விழிப்புணர்வு நிகழ்ச்சி, போட்டி, உடற்பயிற்சி வகுப்புகள் நடத்த வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement