Ad Code

Responsive Advertisement

பி.எப்., தொகை கணக்கு வைக்காதது கிரிமினல் குற்றம்: அதிகாரி எச்சரிக்கை

''பி.எப்., தொகையை, முறையாக கணக்கு வைக்காமல் இருப்பது, கிரிமினல் குற்றம்,'' என, பி.எப்., கோவை மண்டல உதவி கமிஷனர் ரவிதேஜாகுமார் ரெட்டி எச்சரித்து உள்ளார். ஊட்டியில், நிருபர்களிடம் அவர் கூறியதாவது:



இடம் பெயரும் தொழிலாளர்களுக்கு, 'யு.ஏ.என்.,' எனப்படும், நிரந்தர வைப்பு எண் சேவை பயனுள்ளதாக இருக்கும். அரசு போக்குவரத்து கழக
ஊழியர்களின் பி.எப்., நிதியை, முறையாக கணக்கு வைப்பதில்லை என்ற சர்ச்சை இருந்து வருகிறது. போக்குவரத்து கழகம், மின் வாரியம் உட்பட, சில பொதுத் துறை நிறுவனங்கள், தாங்களே பி.எப்., பிடித்தம் செய்துக் கொள்வதாக, எங்களிடம் இருந்து விலக்கு பெற்றுள்ளன. நிபந்தனைகளுக்கு உட்பட்டு தான், பி.எப்., நிறுவனத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. நிபந்தனைகளை பின்பற்றாமல் இருப்பதும், பி.எப்., தொகையை முறையாக கணக்கு வைக்காமல் இருப்பதும் கிரிமினல் குற்றம்.இவ்வாறு ரவிதேஜாகுமார் ரெட்டி கூறினார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement