'ப்ளே ஸ்கூல்' எனப்படும், கே.ஜி., முதல், 3ம் வகுப்பு வரையிலான மழலையர் பள்ளிகளுக்கான கட்டணத்தை, நீதிபதி சிங்காரவேலர் கமிட்டி நிர்ணயம் செய்ய உள்ளது. தமிழகத்தில், 4,000 ப்ளே ஸ்கூல்கள் உள்ளன. எப்படி இருக்க வேண்டும்?
* அரசு வெளியிட்டுள்ள விதிமுறைகள் அமலான ஆறு மாதத்துக்குள், ப்ளே ஸ்கூல்களுக்கான, அங்கீகாரத்துக்கு விண்ணப்பிக்க வேண்டும். இல்லையெனில், அவை மூடப்படும்
* அங்கீகாரம் மற்றும் புதுப்பித்தலுக்கு மாவட்ட தொடக்கக்கல்வி அதிகாரியே பொறுப்பு. அங்கீகாரமானது, மூன்று ஆண்டுகளுக்கு மட்டுமே செல்லுபடியாகும்; பின், அதை புதுப்பிக்க வேண்டும்
* பள்ளி கட்டடங்கள் சொந்தமாகவோ அல்லது ஐந்து ஆண்டுகளுக்கு குறையாமல், குத்தகைக்கு பெற்றதாகவோ இருக்க வேண்டும். அத்துடன், கான்கிரீட் கட்டடங்களாக, சுற்றுச்சுவருடன் இருக்க வேண்டும்
* வகுப்பறைகள் தரை தளத்தில் மட்டுமே இருக்க வேண்டும்
* கழிப்பறை, குடிநீர், விளையாட்டு மைதானம் போன்றவை சரியாக அமைக்கப்பட வேண்டும். குப்பை தொட்டிகள், அதிக ஒலி எழுப்பும் போக்குவரத்து சாலைகள், தொழிற்சாலைகள், பெட்ரோல் 'பங்க்' அருகே பள்ளிகள் இருக்கக்கூடாது
* பள்ளி முழுவதும் கண்காணிப்பு கேமரா இருக்க வேண்டும்.
* ஒவ்வொரு ஆண்டும் ஜூலை, 31ம் தேதியுடன், ஒன்றரை வயதை பூர்த்தி செய்த குழந்தைகளை மட்டுமே சேர்க்க வேண்டும். அனுமதிக்கு நுழைவுத் தேர்வு கூடாது. முதலுதவி, மருத்துவ வசதிகள் வேண்டும்
* பஸ், வேன் போன்றவற்றை குழந்தைகளை அழைத்து வர பயன்படுத்தலாம்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை