Ad Code

Responsive Advertisement

புதிய கல்விக் கொள்கை - 'பள்ளிகள் ஹோம் ஒர்க் கோ - எஜுகேஷன் கூடாது'

புதிய கல்விக் கொள்கையை உருவாக்க, தேவையான ஆலோசனைகளை அளிக்கும்படி, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான, தே.ஜ., கூட்டணி அரசு, பல்வேறு தரப்பினருக்கும் அழைப்பு விடுத்தது.




ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் கல்விப் பிரிவான வித்யா பாரதி, பல்வேறு ஆலோசனைகள் அளித்துள்ளது; அதன் முக்கிய அம்சங்கள்:


* காலை, 7:30 மணி முதல், மாலை, 7:30 மணி வரை, 12 மணி நேரம் வகுப்புகள் நடத்தப்பட வேண்டும்* வெளிநாட்டு மொழிகளுக்குபதிலாக, சமஸ்கிருதம் கற்றுத் தர வேண்டும்


* சிறிய வயதில், மாணவர்கள், மிகவும் எளிதாக மொழிகளை கற்றுக் கொள்ள முடியும். அதன்படி, தாய்மொழி, சமஸ்கிருதம், ஹிந்தி, ஆங்கிலம் மற்றும் பிராந்திய மொழிகள் கற்றுத் தரப்பட வேண்டும்


* தற்போதைய, 6 மணி நேர பள்ளிநேரத்தில், இவற்றை கற்றுத் தர முடியாது. 


* வழக்கமான பாடத்துடன், மொழி, இசை, விளையாட்டு ஆகியவற்றையும் கற்றுத் தர வேண்டும்

* இந்த புதிய பாடத் திட்டத்தின்படி, 'ஹோம் ஒர்க்' இருக்காது. இது, மாணவர்களுக்கும், பெற்றோருக்கும் வசதியாக இருக்கும்


* இருபாலரும் ஒரே வகுப்பில் பயிலும், 'கோ - எஜுகேஷன்' முறை இருக்கக் கூடாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement