Ad Code

Responsive Advertisement

இன்று முதல் நீங்கள் சந்திக்கவுள்ள மாற்றங்கள்!

இன்று, 2016, ஜனவரி 1 - ஆங்கில புத்தாண்டு. இந்த புத்தாண்டில் நீங்கள் சந்திக்கவுள்ள மாற்றங்கள், இதோ:


சலுகைகள்
இன்று முதல், அனைத்து மத்திய அமைச்சகங்கள், துறைகள், பொது துறைகளில் மத்திய அரசு பணியில், 'குரூப் - சி' மற்றும் 'குரூப் - டி' பிரிவு ஊழியர்கள் நியமனத்தில் நேர்முகத் தேர்வு கிடையாது 
ரயில்களில் பயணம் செய்யும் மூத்த குடிமக்களுக்கான படுக்கை வசதி நான்காக அதிகரிக்கப்படுகிறது. இதனால், தம்பதியாக பயணம் செய்வோர், ஒரே பெட்டியில் பயணம் செய்ய முடியும் 


மொபைல் போனில் ஒருவர் பேசிக் கொண்டிருக்கும்போது நடுவில், 'கால் டிராப்' ஆனால், வாடிக்கையாளருக்கு சம்பந்தப்பட்ட தொலைத் தொடர்பு நிறுவனம் ஒரு அழைப்புக்கு, ஒரு ரூபாய் வீதம் அபராதம் தரும். ஒரு நாளுக்கு அதிகபட்சம், மூன்று கால் டிராப்புக்கு, மூன்று ரூபாய் அபராதமாக கிடைக்கும்.

பாதகங்கள்
டில்லியில், வாகனங்களின் ஒற்றை, இரட்டை இலக்க எண்களின் படி, கார்களுக்கு அனுமதி. இதனால், இந்த வரிசைகளில் கார் வைத்திருப்போர் வாரத்திற்கு மூன்று நாட்கள் மட்டுமே பயன்படுத்த முடியும். (டில்லியில் மட்டும்)ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில், லாக்கர்களின்வாடகை, வங்கி கணக்கின் பராமரிப்புக் கட்டணம், இரு சக்கர வாகன கடன், கார் கடன், வீட்டுக்கடன், பில் கலெக் ஷன் மீதான சேவை கட்டணம், கடன் வாங்குவதற்கான நடைமுறை கட்டணம் உயர்கிறது


அனைத்து, பி.எப்., சந்தாதாரர்களுக்கும், 'யுனிவர்சல் அக்கவுண்ட் நம்பர்' எனப்படும், யு.ஏ.என்., எண் கட்டாயமாக்கப்படுகிறது. பி.எப்., பணம் பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை கட்டாயம் குறிப்பிட வேண்டும்தலைநகர் டில்லியில் ஏற்பட்டுள்ள காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த, 2000 சி.சி., திறனுக்கு மேற்பட்ட கார்களின் பதிவு, டீசல் வாகனங்களின் விற்பனைக்கு தடைமானிய விலையில், ஆண்டுக்கு12 சிலிண்டர்கள் வழங்கப்பட்டு வரும் நிலையில், ஆண்டுக்கு, 10 லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு, சமையல் எரிவாயுமானியம் இன்று முதல் ரத்தாகிறது



'பான்' எண் கட்டாயம்
இன்று முதல் கீழ்கண்டவற்றிற்கு 'பான்' கார்டு அவசியம் * இரண்டு லட்சம் ரூபாய்க்கு மேற்பட்ட விற்பனை மற்றும் வாங்கும் போது * கேஷ் கார்டு அல்லது பிரி-பெய்டு கார்டு மூலம், ஆண்டுக்கு 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பொருட்கள் வாங்கினால் * 'ஜன் தன்' எனப்படும், ஏழைகளுக்கு வங்கிக் கணக்கு திட்டம் தவிர, வங்கிகளில் எல்லாவித கணக்கு துவங்கும் போதும் * ரூ.10 லட்சத்திற்கு மேற்பட்ட சொத்துகள் வாங்கும் போது * தபால் அலுவலகங்கள் மற்றும் என்.பி.எப்.சி., எனப்படும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்களில் ஐந்து லட்சம் ரூபாய்க்கு மேல் சேமிக்கும் போது * ெவளிநாட்டில், 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் செலவு செய்தால் அல்லது 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் ெவளிநாட்டு கரன்சிகளை வாங்கும் போது * ஆண்டுக்கு, 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல், எல்.ஐ.சி., 'ஜீவன் பீமா' பாலிசி பிரீமியம் செலுத்தும் போது * இரண்டு லட்சம் ரூபாய்க்கு மேல் ரொக்கமாக அளித்து ஷாப்பிங் செய்யும் போது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement