Ad Code

Responsive Advertisement

Android ஸ்மார்ட் போன் ஹீட் ஆகுவதை தடுப்பது எப்படி?

Android ஸ்மார்ட் போன் உபயோகிக்கும் அனைவருக்குமே இருக்கும் பொதுவான ஒரு பிரச்சினை தான், தங்களுடைய ஸ்மார்ட் போன் சீக்கிரமாக ஹீட் ஆகி விடுவது.

இதற்கு முக்கியமான ஒரு காரணம் அதிகளவான செயலிகள் நமது ஸ்மார்ட் போனில் இருப்பதும் அதே போல் அதிகளவான நேரத்திற்கு தொடர்ந்து ஸ்மார்ட் போனை உபயோகிப்பதும் தான்.இவைகளுக்கு அடுத்த படியாக தரமான பேட்டரியை ஸ்மார்ட் போனில் உபயோகிப்பதும் அதே போல் தரமான மற்றைய உதிரிப்பாகங்களை உபயோகிப்பதும் ஸ்மார்ட் போன் ஹீட் ஆகுவதில் இருந்து தடுக்க உதவுகிறது.

             நான் மேலே குறிப்பிட்ட அனைத்தையும் சரியாக கையாளும் போது நமது ஸ்மார்ட் போன் ஹீட் ஆக்குவதை தடுத்து கொள்ள முடியும். இதனால் இன்றைய பதிவில் அனைவருக்குமே உதவும் வகையில் ஸ்மார்ட் போன் ஹீட் ஆகுவதை எவ்வாறெல்லாம் தடுத்து கொள்ளலாம் என்று கூறுகிறேன்.

முதலாவதாக ஸ்மார்ட் போன் ஹீட் ஆகுவதை தடுக்கும் மிகச்சிறந்த செயலிகளை உங்களுக்கு அறிமுகம் செய்கிறேன். இந்த செயளிகலானது உங்கள் ஸ்மார்ட் போனில் எதாவது ஒரு செயலி அதிகளவான Resource-களை பெற்றுக்கொண்டு உங்களது ஸ்மார்ட் போனை ஹீட் ஆக்கிக்கொண்டிறுக்கிறது என்றால் அந்த குறிப்பிட்ட செயலியை கட்டுப்பாட்டிட்க்குள் கொண்டு வர உதவும். அதே போல் ஏதேனும் சிஸ்டம் பிரச்சினையால் உங்கள் ஸ்மார்ட் போன் ஹீட் ஆகிறது என்றால் அவற்றையும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர உதவுகிறது.
இந்த வேலையை மிகச்சிறப்பாக செய்து முடிக்க உதவுகிறது கீழே குறிப்பிடப்பட்டிருக்கும் செயலிகள். இவற்றில் எதாவது ஒரு செயலியை உங்கள் ஸ்மார்ட் போனில் நிறுவி உங்களது ஸ்மார்ட் போன் ஹீட் ஆகுவதை தடுத்து கொள்ளுங்கள்.


Cooler Master
CPU Temperature


அடுத்ததாக Cache Partition-ஐ சுத்தப்படுத்துவதன் மூலம் ஸ்மார்ட் போன் ஹீட் ஆக்குவதை தடுப்பது எப்படி என்று பார்ப்போம்.
உங்களது ஸ்மார்ட் போனை Switch Off செய்யுங்கள்.
Power Button + Home Button + Volume Up/Down Button போன்றவைகளை ஒரே நேரத்தில் அழுத்துவதன் மூலம் Recovery Mode-ற்கு செல்லுங்கள்.
அங்கே Wipe Cache Partition என்று இருப்பதை தெரிவு செய்யுங்கள்.
குறிப்பு - Volume Up/Down பட்டன்களை பயன்படுத்தியே மேலும் கீழும் செல்ல முடியும். அதே போல் Power பட்டன் மூலம் தெரிவுகளை OK செய்ய முடியும்.
Wipe Cache Partition என்பதை தெரிவு செய்து Power பட்டன்-ஐ அழுத்தவும்.

அடுத்து reboot system now என்பதை தெரிவு செய்யுங்கள்.
இப்போது உங்களது ஸ்மார்ட் போன் Reboot ஆகி மறுபடியும் On ஆகும்.
அவ்வளவு தான். உங்களது ஸ்மார்ட் போனில் Cache Partition ஆனது சீராக்கப்பட்டு விட்டது. இப்போது உங்களது ஸ்மார்ட் போனை உபயோகிக்கும் போது முன்னரிலும் பார்க்க ஹீட் ஆகுவது குறைந்திருப்பதை உங்களால் உணர்ந்து கொள்ள கூடியதாய் இருக்கும்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement