Ad Code

Responsive Advertisement

லேப்டாப்களை கொண்டு வர பிளஸ் 2 மாணவருக்கு உத்தரவு.

தமிழக அரசு சார்பில், பிளஸ் 2 மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்பட்டு வருகிறது.லேப்டாப் பெற்றுக் கொண்டவுடன், சாப்ட்வேர் இன்ஸ்டால் செய்யப்பட வேண்டும். ஆனால் பலருக்கு இது தெரிவதில்லை. இதனால் தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கான லேப்டாப்கள், மாணவர்களின் வீடுகளில் முடங்கியுள்ளன.

இதை ஆய்வு செய்த அரசு, எல்காட் நிறுவனம் மூலம் சாப்ட்வேரை இன்ஸ்டால் செய்ய உத்தரவிட்டுள்ளது. இந்நிறுவன ஊழியர்கள் மாவட்டம் தோறும் சென்று, முதற் கட்டமாக இந்தாண்டு லேப்டாப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சாப்ட்வேரை இன்ஸ்டால்செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து பள்ளி கல்வி துறை அதிகாரிகள் கூறியதாவது:ஈரோடு ரயில்வே காலனி மாநகராட்சி மேல்நிலை பள்ளி, ஈரோடு அரசு மகளிர் மேல்நிலை பள்ளிகளில், லேப்டாப்களில் சாப்ட்வேரை இன்ஸ்டால் செய்யும் பணி இன்று துவங்குகிறது. படிப்படியாக அனைத்து பள்ளிகளிலும் இப்பணி நடைபெறும். விடுபட்ட மாணவ, மாணவிகளும் சாப்ட்வேரை இன்ஸ்டால் செய்து கொள்ளலாம். பள்ளி தலைமை ஆசிரியர் அல்லது வகுப்பாசிரியர் சொல்லும் நாட்களில் லேப்டாப்பை எடுத்து வர வேண்டும். வேறு பிரச்னைகள் இருந்தாலும் கூட நிவர்த்தி செய்து கொள்ளலாம். இவ்வாறு தெரிவித்தனர். 

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement