கடந்தாண்டு மார்ச் 5ல், பிளஸ் 2 தேர்வும், மார்ச் 19ல், பத்தாம் வகுப்பு தேர்வும் துவங்கிய நிலையில், இந்தாண்டு பிளஸ் 2 தேர்வு மார்ச் 4ம், பத்தாம்வகுப்பிற்கு மார்ச் 15 என முன்கூட்டியே துவங்கவுள்ளன. சென்னை, கடலுார்உட்பட 6 மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்பால் பொதுத் தேர்வுகள் தள்ளிப்போகலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முன்கூட்டியே இத்தேர்வுகள் துவங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் பிளஸ் 2 தேர்வில், முக்கியத்துவம் வாய்ந்த இயற்பியல் தேர்வு எந்தாண்டும் இல்லாத வகையில் கடைசி தேர்வாக அறிவிக்கப்பட்டுள்ளது மாணவர்களை குழப்பியுள்ளது. இதேபோல், மார்ச் 22ல் நடக்கும் பத்தாம் வகுப்பு ஆங்கிலம் முதல் தாள் தேர்விற்குபின், ஆறு நாட்கள் விடுமுறைக்கு பின் 29ம் தேதி தான் இரண்டாம் தாள் தேர்வு நடக்கிறது. ஏப்.,13ல் தான் அனைத்து தேர்வுகளும் முடிகின்றன. முன்கூட்டியே அறிவிக்கப்பட்டாலும் ஒரு சில தேர்வை தவிர ஒவ்வொரு தேர்வுக்கும் குறைந்தபட்சம் மூன்று நாட்கள் வரை விடுமுறை இடைவெளிஉள்ளது.
பொதுத் தேர்வுகள் அட்டவணை முடிவு செய்வதற்கு முன் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்களிடம் கல்வித்துறை சார்பில் கருத்துகேட்கப்படும். ஆனால் இந்தாண்டு அதுபோன்று நடக்கவில்லை. மேலும் வெள்ளப் பாதிப்பால் தள்ளிப்போகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் முன்கூட்டியே தேர்வு அறிவிக்கப்பட்டாலும், அதிக விடுமுறை அறிவிப்பு, பிளஸ் 2 இயற்பியல் தேர்வு முதல்முறையாக கடைசியாக பட்டியலிடப்பட்டது போன்றவை குழப்பமாகஉள்ளது. மேலும் கடைசி திருப்புதல் தேர்வு நடத்த முடியுமா என கேள்வியும் எழுந்துள்ளது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை