Ad Code

Responsive Advertisement

பிளஸ் 2 தேர்வர் பெயர் பட்டியல்; பிழை திருத்த மீண்டும் வாய்ப்பு

பிளஸ் 2 தேர்வெழுதும் மாணவ, மாணவியரின் பெயர் பட்டியலில் திருத்தம் செய்ய, ஜனவரி, 20 ம்தேதி முதல், 22ம் தேதி வரை வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் மாதத்தில் தொடங்குகிறது. இதில், தேர்வெழுதும் மாணவ, மாணவியரின் பெயர் பட்டியல், அந்தந்த பள்ளிகளின் மூலம், தேர்வுத்துறை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ்களில், இப்பட்டியலில் உள்ள விபரமே அச்சிடப்படும் என்பதால், அதில் பிழைகள் ஏதும் இல்லாமல் சரிபார்க்க, தலைமை ஆசிரியர்கள் அறிவுறுத்தப்படுகின்றனர். தேர்வெழுதும் மாணவ, மாணவியரின் இறுதி பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ள நிலையில், அவை ஜனவரி, 20ம் தேதி முதல், ஜனவரி, 22ம் தேதி வரை, தேர்வுத்துறையின் இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.

பள்ளி தலைமை ஆசிரியர்கள், இப்பெயர் பட்டியலை அன்றைய தினத்தில் டவுன்லோடு செய்து, மாணவர்களின் இன்ஷியல், பெயர், பிறந்ததேதி, பாடத்தொகுதி எண், பாடக்குறியீடு, பயிற்றுமொழி ஆகியவற்றை சரிபார்த்து, அதில் பிழை ஏதும் இருப்பின் திருத்தம் செய்து, ஜனவரி, 22 ம்தேதி மாலை, மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கு பின் மாணவர்களின் பெயர்களில் ஏற்படும் பிழைகளுக்கு, பள்ளி தலைமை ஆசிரியர்களே பொறுப்பேற்க நேரிடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement