ஒப்பந்த அடிப்படையில் 32 மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பணியிடங்களுக்கான விண்ணப்பங்களை ஜனவரி 18-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சமூகப் பாதுகாப்புத் துறையால் மொத்தம் 32 மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
இந்தப் பணியிடங்களுக்கான தொகுப்பூதியம் ரூ.33,250 ஆகும். கல்வித் தகுதி: சமூகப்பணி, சமூகவியல், உளவியல், குற்றவியல், குழந்தை வளர்ச்சி ஆகிய துறைகளில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். இந்தத் துறைகளில் முதுநிலைப் பட்டம் பெற்றிருப்பவர்கள், அடிப்படை கணினி இயக்கும் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். குழந்தைத் தொழிலாளர் நலன், சமூக நலம், குழந்தைகள் நலம் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றில் 5 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் வேண்டும்.
1.1.2016-ஆம் தேதியன்று 26 வயதுக்கு மேற்பட்டவராகவும் 40 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.18-ஆம் தேதிக்குள்..: குழந்தைத் தொழிலாளர் நலன், சமூக நலன், குழந்தை நலம் ஆகிய துறைகளில் கள ஆய்வில் புதிய திட்டங்களை வகுப்பதில் பங்குபெற்ற அரசிதழ் பதிவு பெற்ற அலுவலர் நிலையில் பணிபுரிந்த அனுபவமிக்க ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களும் விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பங்களை www.tn.gov.in/department/30 என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செயயலாம்.
புகைப்படங்களுடன் கூடிய விண்ணப்பங்களை ஜனவரி 18-ஆம் தேதி மாலை 5.30 மணிக்குள் அனுப்ப வேண்டிய முகவரி: இயக்குநர்-செயலாளர், மாநில குழந்தைகள் பாதுகாப்பு சங்கம், சமூகப் பாதுகாப்புத் துறை, 300, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, கெல்லிஸ், சென்னை-10, தொலைபேசி: 044-26421358.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை