கல்வித்துறையால் கொண்டு வரப்பட்ட,14 (ஏ) சட்டத்தை திரும்பப் பெறாவிட்டால், தனியார் தமிழ்வழிப் பள்ளிகளை, வரும் கல்வியாண்டில் மூடிவிடுவோம்' என, அதன் நிர்வாகிகள் எச்சரித்துள்ளனர்.தமிழ்நாடு தமிழ்வழிப் பள்ளி நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநில செயற்குழு கூட்டம், திருச்சியில் நடந்தது.
குறைந்த சம்பளம்கூட்டத்தில், தமிழ்நாடு தமிழ்வழிப் பள்ளி நிர்வாகிகள் கூட்டமைப்பின் மாநில பொதுச் செயலர் செபாஸ்டியன் கூறியதாவது:
தமிழகத்தில், 1991ல், தி.மு.க., ஆட்சியில், தனியார் தமிழ்வழி தொடக்கப் பள்ளி, தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்குவதை தடுக்கும் வகையில், 14 (ஏ) சட்டம் இயற்றப்பட்டது. இதனால், மாநிலம் முழுவதுமாக, 1,105 பள்ளிகளில் பணிபுரியும், 8,000 ஆசிரியர்கள், தற்போது வரை குறைந்தபட்ச சம்பளம் வாங்கி சிரமப்படுகின்றனர்.
தாய்மொழிக் கல்வி பயிலும் மாணவர்களுக்கு கல்வி பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கு, மாணவர்களிடம் பணம் வசூலித்து, சம்பளம் வழங்கும்நிலை உள்ளது. தமிழ்வழிக் கல்வி பள்ளிகளை துவங்க அனுமதித்த தமிழகஅரசு, பள்ளி ஆசிரியர்களுக்கு, 24 ஆண்டுகளாக சம்பளம் வழங்காததைவன்மையாக கண்டிக்கிறோம். எனவே, 14 (ஏ) தடை சட்டத்தை விலக்கி,ஆசிரியர்களுக்கு சம்பள நிலுவையை வழங்க வேண்டும்.
செலவு ஏற்படாது
இதற்காக அரசு, புதிதாக நிதி ஒதுக்கீடு செய்யத் தேவையில்லை. திரும்ப ஒப்படைக்கப்படும் ஆசிரியர் பணியிடங்களை வழங்கினால் போதும்; இதனால், அரசுக்கு செலவு ஏற்படாது. மறுத்தால், எதிர்வரும் கல்வியாண்டில், தமிழகத்திலுள்ள தமிழ்வழிப் பள்ளிகளை மூடும் சூழல் ஏற்படும். ஆறு லட்சம் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாவதை தடுப்பது, தமிழக அரசின் முடிவில் தான் உள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை