Ad Code

Responsive Advertisement

ரூ.100 இலவசம் இன்றே கடைசி

ரேஷன் கடைகளில், 1.53 கோடி குடும்பங்களுக்கு, பொங்கல் பரிசு வழங்கிய நிலையில், 100 ரூபாய் இலவசம் பெற இன்றே கடைசி என தெரிவிக்கப்பட்டு உள்ளது.


தமிழக அரசு, பொங்கலை முன்னிட்டு, 1.91 கோடி குடும்பங்களுக்கு தலா, 1 கிலோ பச்சரிசி, சர்க்கரை, இரண்டு அடி கரும்பு துண்டு, 100 ரூபாய் பணம் அடங்கிய பரிசு தொகுப்பை அறிவித்தது. சென்னை, தலைமைச் செயலகத்தில், ஜன., 7ல், முதல்வர் ஜெயலலிதா, பரிசு தொகுப்பு வினியோகத்தை துவக்கி வைத்தார்.

'நேற்று வரை, 1.53 கோடி குடும்பங்களுக்கு, பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு உள்ளது. இன்று மாலை வரை பரிசு வழங்கப்படும்' என, உணவு வழங்கல் துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement