Ad Code

Responsive Advertisement

வகுப்பறையில் பூச்சி தொல்லை ஆசிரியர்கள் சோதிக்க உத்தரவு

வகுப்பறையில் பூச்சிகள் இருக்கிறதா என்பதை ஆய்வு செய்த பிறகே, மாணவர்களை அனுமதிக்க வேண்டும்' என, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் இன்று, பள்ளி, கல்லுாரிகள் திறக்கப்படுகின்றன. இந்நிலையில், அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும், கல்வித்துறை அதிகாரிகள் சுற்றறிக்கை அனுப்பியுள்ளனர்.


அதன் விவரம்:
*கீழ்நிலை நீர்த்தேக்க தொட்டி, மேல்நிலை நீர்த் தேக்க தொட்டி, கிணறு, ஆழ்துளை கிணறு போன்றவற்றை 'பிளீச்சிங் பவுடர்' மூலம் சுத்தம் செய்ய வேண்டும். நீரில் கிருமிகளை கொல்லும் குறிப்பிட்ட அளவு, 'குளோரின்' கலந்த பின் குடிக்க தர வேண்டும்

*பள்ளி வளாகங்களில், குப்பை இல்லாமல் அகற்ற வேண்டும். குப்பை தேங்கி கிடந்தால் கொசு மற்றும் ஈக்கள் உற்பத்தியாக வாய்ப்பு ஏற்படும்

*எலுமிச்சை மற்றும் குளோரினை, 4க்கு, 1 என்ற விகிதத்தில் கலந்து, பள்ளி வளாகத்தில் சுத்தம் செய்ய வேண்டும். வகுப்பறைகளை, 'பினாயில்' மூலம் சுத்தம் செய்ய வேண்டும்

*மின் சாதனங்கள், 'ஸ்விட்ச்'களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். கட்டடத்தில் எங்காவது விரிசல் போன்ற பாதுகாப்பற்ற தன்மை இருந்தால், அந்தப் பகுதியை பயன்படுத்தக் கூடாது

*வெள்ளம் காரணமாக, ஊர்வன, பறப்பன வகை பூச்சிகள் வகுப்பறைகளில் இருக்க வாய்ப்புள்ளது. எனவே, வகுப்பறைகளுக்குள் சென்று, முழுமையாக ஆய்வு செய்து, அதன் பிறகே மாணவர்களை வகுப்பறைக்குள் அனுமதிக்க வேண்டும்.இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement