Ad Code

Responsive Advertisement

ஆசிரியர்களை பயிற்சிக்கு அழைக்கும் நேரமா இது?

பாடம் நடத்தவும், தேர்வு நடத்தவும், நாளில்லாமல் ஆசிரியர்கள் திணறி வருகின்றனர்; இந்நிலையில் ஆசிரியர்களை, ஒரு மாதம் பயிற்சிக்கு வருமாறு, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. 

பள்ளிக்கல்வித் துறையில், அனைவருக்கும் கல்வி இயக்கம், அனைவருக்கும் இடைநிலைக் கல்வி இயக்கம், ஆசிரியர் கல்வியியல் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றின் சார்பில், ஆசிரியர்களுக்கு பயிற்சிகள் தரப்படுகின்றன. இதற்கு, மத்திய அரசிடமிருந்து, பல கோடி ரூபாய் நிதி கிடைக்கிறது.கற்றல், கற்பித்தலை தொழில்நுட்ப ரீதியாக வழங்க வேண்டும் என்பது தான், மத்திய அரசின் நோக்கம்.

ஆனால் இது, தமிழகத்தில், பலனில்லாத பயிற்சி திட்டங்களாக மாறிவிட்டன. தமிழகத்தில், பள்ளிக்கல்வி இயக்குனரகம், தொடக்கக் கல்வி இயக்குனரகம் ஆகியவற்றுடன், பயிற்சி அளிக்கும் மூன்று இயக்குனரகங்களின் செயல்பாடுகள் ஒருங்கிணைக்கப்படவில்லை. எனவே, பாடம் நடத்துவதைப் பார்க்க ஒரு துறை; பயிற்சியை நடத்த, வேறொரு துறை என, முரண்பாடாக உள்ளது.

தற்போது இரண்டாம் கல்விப் பருவத்தில், மழைக்கால விடுமுறை, பண்டிகை விடுமுறைகளுக்கு மத்தியில், அரையாண்டுத் தேர்வு நெருங்கியுள்ளது. பாடங்களை எப்படி முடிப்பது என, ஆசிரியர்கள் திணறி வருகின்றனர். இந்த நேரத்தில், ஒரு மாதம் முழுவதும் ஆசிரியர் பயிற்சிக்கான அட்டவணையை கல்வித்துறை அறிவித்துள்ளது. 

* பிளஸ் 2 மாணவர்களுக்கு பாடம் எடுக்க, மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் மூலம், டிசம்பர் முதல் வாரத்தில் பயிற்சி

* நவ., 30, டிச., 1 மற்றும் 5ம் தேதிகளில், தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு, வாசித்தல், எழுதுதலுக்கு பயற்சி 

* நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு, டிச., 12ல், குறுவள பயிற்சி, கணித பயிற்சி பெட்டகப் பயிற்சி, கணினி இயக்கம் மற்றும் கற்பித்தல் பயிற்சி. நவ., 30 முதல் டிச., 22ம் தேதி வரை நடக்கும் பயிற்சியில், ஆசிரியர்கள் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என, பள்ளிக்கல்வித் துறை சுற்றறிக்கை அனுப்பிஉள்ளது

Post a Comment

1 Comments

  1. ஆசிரியர்களுக்கு பயிற்சிக்கு செலவிடும் தொகையை வைத்து மாணவர் எண்ணிக்கை அதிகம் உள்ள பள்ளிகளில் தொகுப்பூதியத்தில் கூடுதல் ஆசிரியர்களை நியமித்தால் அரசுப்பள்ளிகளின் கல்வித்தரமும் உயரும் அதன் பயனாக அரசுப்பள்ளியின் மாணவர் எண்ணிக்கையும் கூடும். இதையெல்லாம் ஒரு ஆசிரியர் சொன்னால் அரசு கேட்சுமா? அல்லது ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் தான் கேட்பார்களா?
    உயர் மட்டத்தில் இருப்பவர்களுக்கு கீழ் மட்டத்தில் இருப்பவர்கள் சொல்வது எல்லாம் செவிடன் காதில் ஊதின சங்கு போலத்தான் இருக்கும்.

    ReplyDelete

அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..

நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை

Ad Code

Responsive Advertisement