Ad Code

Responsive Advertisement

வெள்ளத்தால் தேர்வு தாள் நாசம்

சென்னையை நிலை குலைய வைத்த வெள்ளப்பெருக்கால், டி.பி.ஐ., வளாகத்தில் உள்ள கல்வித்துறை அலுவல கோப்புகள் மற்றும் கிடங்கில் இருந்த பாடப் புத்தகங்கள் சேதமடைந்தன. சென்னையில் கூவம் கரையை ஒட்டியுள்ள, டி.பி.ஐ., வளாகத்தில் புகுந்த வெள்ளம், கல்வித்துறை அலுவலகங்களுக்குள் சென்று, பாடநுால் கழக கிடங்கின் தரை தளத்திலுள்ள புத்தகங்கள் அனைத்தையும் நனைத்துள்ளது. 

தேர்வுத்துறை அலுவலகத்திற்குள் தண்ணீர் புகுந்ததால், அங்கு குவித்து வைக்கப்பட்டிருந்த தேர்வுத் தாள்கள் நாசமாகின. இதில், செப்டம்பரில் நடந்து முடிந்த, பிளஸ் 2, 10ம் வகுப்பு துணைத் தேர்வு விடைத்தாள்களும் சேதமடைந்துவிட்டன.

இதனால், மாணவர்கள் வழக்கு தொடர்ந்தால் அவர்களுக்கு விடைத்தாள்களை வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் சைதாப்பேட்டை, மத்திய மாவட்ட கல்வி அலுவலகம், எழும்பூர் தெற்கு மாவட்ட கல்வி அலுவலக கோப்புகளும் சேதமடைந்துள்ளன

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement