Ad Code

Responsive Advertisement

மறுபடியுமா? நாளை மறுநாள் முதல் சென்னைக்கு இடியுடன் கூடிய கனமழையாம்... குலைநடுங்க வைக்கும் BBC

(7 Dec) லண்டன்: சென்னையில் நாளை மறுநாள் புதன்கிழமை முதல் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று பி.பி.சி. தொலைக்காட்சியின் வானிலை பிரிவு எச்சரிக்கை விடுத்திருப்பது சென்னையை குலைநடுங்க வைத்திருக்கிறது. 

டிசம்பர் முதல் வாரத்தில் பி.பி.சி.யின் வானிலை பிரிவு ஒரு எச்சரிக்கையை விடுத்திருந்தது.. சென்னையில் 3 நாட்கள் பேய்மழை தொடரும்.. மழையளவு 50 செ.மீ. இருக்கும் என்றது... இது குறித்து வானிலை ஆய்வு மைய இயக்குநர் ரமணனிடம் கேட்டபோது, நீங்க போய் பி.பி.சி.காரங்ககிட்ட கேளுங்க என்று எகத்தாளமாக பேசினார்... ஆனால் நடந்தது பி.பி.சி. சொன்னபடிதான்...

தாம்பரத்தில் 50 செ.மீ. மழை கொட்டியது.. அத்துடன் சென்னையை மூழ்கடித்த பெருவெள்ளம் பாய்ந்தோடியது... அன்று பி.பி.சியை ஏகடியம் பேசிய வானிலை ஆய்வு மைய ரமணன் கூட வெள்ளத்தில் சிக்கித்தான் மீட்கப்பட்டார்.. அந்த பேய்மழையும் பெருவெள்ளமும் சென்னையில் லட்சக்கணக்கானோரை ஒரே நாளில் அகதிகளாக ஏதுமற்றவர்களாக உருக்குலைத்து போட்டுவிட்டது. பல்லாயிரக்கணக்கானோரை சென்னை பெருநகரை விட்டே துரத்தியடித்துவிட்டது... 

அடையாறு, கூவம் கரையோர மக்கள் மட்டுமின்றி சென்னையின் உள்பகுதியும் களேபர காடாகிக் கிடக்கிறது. இந்த நிலையில் குமரி கடலில் உருவான தாழ்வழுத்த நிலையால் 2 நாட்கள் கனமழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதே நேரத்தில் பி.பி.சி. மீண்டும் ஒரு எச்சரிக்கையை இன்று விடுத்துள்ளது. 

சென்னையில் நாளை மறுநாள் புதன்கிழமை முதல் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை வரைபடங்களுடன் அது எச்சரித்துள்ளது. இதையும் ஒரு எச்சரிக்கையாக எடுத்துக் கொண்டு அரசு இப்போதே கவனம் செலுத்தினால்தான் நல்லது. ஒருபேய்மழை வெள்ளத்தை எதிர்கொண்டு லேசாக மூச்சுவிட முயற்சிக்கும் சென்னைவாசிகளை நிம்மதி இழக்க செய்திருக்கிறது இந்த பெருமழை எச்சரிக்கை. 

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement