Ad Code

Responsive Advertisement

பி.எப்., சந்தாதாரர்கள் ரூ.5,000 பெறலாம்!

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட, பி.எப்., எனப்படும், வருங்கால வைப்புநிதி சந்தாதாரர்கள், 5,000 ரூபாய் திரும்ப செலுத்தாத முன்பணம் பெறலாம்' என, பி.எப்., நிறுவனம் எனப்படும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, சென்னை மண்டல பி.எப்., கமிஷனர் பிரசாத் கூறியிருப்பதாவது:

வெள்ளத்தால், அசையும், அசையா சொத்துகள் பாதிக்கப்பட்ட பி.எப்., சந்தாதாரர்கள், தங்கள் கணக்கில் இருந்து, திரும்பிச் செலுத்தாத வகையில், 5,000 ரூபாய் அல்லது உறுப்பினரின் பங்குத்தொகையில், 50 சதவீதத்தில் எது குறைவோ, அதை முன்பணமாக பெறலாம். வெள்ளம் பாதித்த பகுதிகள் என, தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட இடங்களில் உள்ள சந்தாதாரர்கள், உரிய அதிகாரிகளிடம் பாதிப்புக்கான சான்று பெற்று, நான்கு மாதத்திற்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

சென்னை சந்தாதாரர்கள், இதற்கான படிவம், 31ஐ பெற்று, பாதிப்புக்கான ஆவணங்களுடன், சென்னை மண்டல அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். 
விண்ணப்பங்கள் மீது முன்னுரிமை அடிப்படையில், நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement