Ad Code

Responsive Advertisement

5 நாள் கனமழை - தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு.

'வங்கக் கடலில் உருவாகியுள்ள, புதிய காற்று அழுத்த தாழ்வு நிலை, தீவிரமடைந்து வருகிறது. இதனால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில், அடுத்த ஐந்து நாட்களுக்கு கனமழை பெய்யும்' என, வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது. இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன், நேற்று கூறியதாவது: 

இரு நாட்களுக்கு முன், அந்தமான் கடலில் உருவான காற்று அழுத்த தாழ்வு நிலை, எதிர்பார்த்த அளவு வலுவடைந்து, தமிழகத்தை நோக்கி நகரவில்லை; மறைந்து விட்டது. தற்போது, வங்கக் கடலின் தென்மேற்கு பகுதியில், இலங்கை அருகே, புதிய காற்று அழுத்த தாழ்வு உருவாகி உள்ளது. இது, தென்மேற்காக மேலும் நகர்ந்து, தமிழகம் அருகே நிலை கொண்டுள்ளது. இதனால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில், அடுத்த நான்கு நாட்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மழை எச்சரிக்கை: டிச., 1, 2, - தமிழக வட மாவட்டங்கள், புதுச்சேரியின் அனேக இடங்களில் மிக கனமழை; தென் மாவட்டங்களில், ஒருசில இடங்களில் கனமழை. டிச., 3, 4 - தமிழகம், புதுச்சேரியில் பரவலாக கனமழை.சென்னையில், அடுத்த 48 மணி நேரத்துக்கு, வானம் மேக மூட்டத்துடன் காணப்படும்; மழை அல்லது இடியுடன் கூடிய மழை, விட்டு விட்டு பெய்யும்.நேற்று காலை, 8:30 மணிவரை, தமிழகத்தில் அதிகபட்சமாக, தஞ்சை மாவட்டம், குடவாசல் - 12; விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் - 10; சிவகங்கை மாவட்டம், திருபுவனம் - 9 செ.மீ., மழை பதிவாகி உள்ளது.

அதிகம்:

இவ்வாறு அவர் கூறினார்.
நேற்றுடன் முடிந்த ஒரு வாரத்தில், இயல்பு அளவாக தமிழகத்தில், 3.6 செ.மீ., மழை பெய்ய வேண்டும். ஆனால், 9.1 செ.மீ., மழை பெய்துள்ளது. இதே கால கட்டத்தில், சென்னையில், 8.2 செ.மீ., மழை பெய்ய வேண்டும். ஆனால், 21.7 செ.மீ., மழை பெய்துள்ளது. இதேபோல், 30 மாவட்டங்களில் இயல்பு அளவை விட, கூடுதலாக மழை பெய்துள்ளது. ஈரோடு, கரூர் மாவட்டங்களில், இயல்பு அளவு மழை பதிவாகி உள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் மட்டும், இயல்பு அளவை விட, குறைவாக மழை பெய்துள்ளது.

மாவட்ட நிர்வாகங்கள் 'உஷார்':

தமிழகத்தில், ஐந்து நாட்களுக்கு கனமழை பெய்தால், அதை சமாளிக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும்படி, கலெக்டர்கள் உட்பட, அனைத்து துறை அதிகாரிகளுக்கும், அரசு அறிவுறுத்தி உள்ளது.* ஏற்கனவே பெய்த தொடர் மழையால், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கடலுார், துாத்துக்குடி மாவட்டங்கள், பெரும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளன* கனமழை தொடரும் என்பதால், அனைத்து துறை அதிகாரிகளும், ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்* தண்ணீர் தேங்கும் பகுதிகளில், உடனடியாக தண்ணீரை வெளியேற்ற வேண்டும்* நீர்நிலைகளை, 24 மணி நேரமும் கண்காணிக்க வேண்டும்*நீர் கசிவை நிறுத்த, மணல் மூட்டைகளை தயார் செய்து வைத்திருக்க வேண்டும்* நிவாரண முகாம் மற்றும் மருத்துவ குழுக்களை, 24 மணி நேரமும் செயல்படும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும்.இவ்வாறு அனைத்து துறை அதிகாரிகளுக்கும், அரசு அறிவுறுத்தி உள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement